Homeதமிழ்கல்லணை பற்றிய வரலாறு | Kallanai Dam History in Tamil

கல்லணை பற்றிய வரலாறு | Kallanai Dam History in Tamil

கல்லணை பற்றிய வரலாறு | Kallanai Dam History in Tamil

கல்லணை கிராண்ட் அணை என்று அழைக்கப்படுகிறது.இது 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சோழ வம்சத்தின் கரிகாலனால் கட்டப்பட்ட ஒரு பழமை வாய்ந்த அணையாகும்.

- Advertisement -

இது இந்தியாவில் தமிழ்நாடு திருச்சி மாவட்டத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு அணையாகும்.இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.இது உலகின் நான்காவது பழமையான நீர் திறப்பல் அணையாகும்.

இது இந்தியாவில் இன்னும் பயன்பாட்டில் இருக்கின்றது.இதன் கண்கவர் கட்டிடக்கலை காரணமாக இது தமிழ்நாட்டின் முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கின்றது.இதனைப் பற்றி தற்பொழுது விரிவாக பார்ப்போம்.

Kallanai Dam Age

இந்த அணை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இன்று ஆய்வு ஒன்று கூறப்பட்டிருக்கிறது.இந்த அணை உலகின் பழமையான அணைகளில் ஒன்றாக திகழ்கிறது.இது தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இதனை உலகின் பழமையான அணையாகும்.

கல்லணை கட்டிய ஆண்டு

இந்த அணை ஊ. முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டன.இது தற்பொழுது அணைகளில் கல்லணையை மிகவும் பழமையான ஒன்றாகவும் தற்பொழுது புழக்கத்தில் உள்ளது என்றும் அறியப்படுகின்றது.இதனை உலகின் மிகப் பழமையான நீர் பாசன திட்டத்தில் ஒன்று என்றும் கூறப்படுகின்றது.

- Advertisement -

கல்லணை அமைந்துள்ள மாவட்டம்

கல்லணை தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் வட்டத்தில் தோகூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது.திருச்சியில் அகண்ட காவிரி இன்று அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் இருந்து வடப்புறம் கொள்ளிடமும் தென்புறம் காவேரி என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றது.இந்த இடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேல் அணைகள் கட்டப்பட்டது.

கல்லணை வேறு பெயர்கள்

இவர் பயனற்று இருந்த கல்லணையை தைரியமாக சிறுசிறு பகுதிகளாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தனர்.கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்து அவர்கள் பழந்தமிழரின் அணைக்கட்டும் திறனையும் பாசன மேலாண்மையும் உலகிற்கு எடுத்துக் கூறினார்கள்.கல்லணைக்கு கிராண்ட் அணை என்று மற்றொரு பெயரும் வைக்கப்பட்டது.

- Advertisement -
கல்லணை பற்றிய கட்டுரை
கல்லணை பற்றிய கட்டுரை

கல்லணை தொழில்நுட்பம்

  • தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு வந்து கொண்டு இருந்ததால் அங்கு இருந்த மக்கள் அனைவரும் துயரத்தில் இருப்பதனை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கடற்கரையின் ஓரத்தில் நின்று கொண்டு யோசித்துக் கொண்டே இருந்தார்.
  • அப்பொழுது அலை அடித்து வந்து அவருடைய காலை கழுவி செல்லும்போது அலையடித்துச் சென்ற பிறகு பாதங்களுக்கு கீழ் சிறிது மணல் அரித்து சிறிய குழி ஏற்பட்டது.இதனை பார்த்த கரிகால சோழன் இந்த தத்துவத்தை பயன்படுத்தி கல்லணையை கற்களால் கட்ட முடிவு செய்தார்.
  • காவிரியில் ஒரு பெரிய அணையை கட்ட முடிவு செய்தார்.ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கன நீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணை கட்டுவதற்கு ஒரு வழியை கண்டுபிடித்தார்.
  • காவிரி ஆற்றின் மீது மிகப்பெரிய பாறைகளை கொண்டு வந்து போட்டார்கள் அந்த பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து விட்டன.
  • அதன் மேல் வேறு ஒரு பாதையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணை புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக் கொள்ளும் விதமாக செய்தார்கள்.இந்த கல்லணையை கரிகால சோழன் கற்களை கொண்டு கட்டினார்.

கல்லணை சிறப்புகள்

  • இது உலகின் மிகப் பழமையான நீர் பாசன திட்டமாகும்.
  • தற்பொழுது அணைகளில் கல்லணையை மிக பழமையானதும் இன்றளவும் சிதையாமலும் இருக்கின்றது.
  • மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
  • இது கல்லிலும் களிமண்ணிலும் மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.
  • 2000 ஆண்டுகளுக்கு மேலாக காவேரி ஆற்றின் வெள்ளத்தை தடுத்து நிறுத்தி வருகின்றது.
  • இது பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறைசாற்றி வருகின்றது.

கல்லணை பற்றிய வரலாறு

  • தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் கல்லணை அமைந்திருக்கிறது. இதனுடைய வேறொரு பெயர் கிராண்ட் அணை என்று கூறுவார்கள்.இந்த அணையானது கரிகால சோழனால் ஒண்ணாம் நூற்றாண்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.
  • இந்த அணையின் நீளம் சுமார் 1080 அடி இதன் அகலம் 66 அடி உயரம் 18 அடியை கொண்டது.இந்த அணையை கல்லும் களி மண்ணும் மட்டுமே கொண்டு கட்டப்பட்டது.இது 2000 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது.பெரியாரான காவேரி ஆற்றின் இல்லத்தை தடுத்து நிறுத்தி வருகின்றது.இது உண்மையில் மிகப்பெரிய அதிசயத்தில் ஒன்று தான்.
  • இந்த அணை உலகின் மிக பழமையான நீர் பாசன திட்டம் என்று கூறப்படுகிறது.இதனுடைய மணலில் அடிதலும் அமைத்து கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.இந்த அணையை 1853 பார்த்த பிரிட்டிஷ் இன்ஜினியர் பெயர்டு ஸ்மித் என்பவர் கல்லணை ஒரு பொறியியல் சாதனை என்று பதிவு செய்து இருக்கின்றார்.
  • தென்னிந்திய அணை கட்டுகளின் தந்தை என்று போற்றப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற பிரிட்டிஷ் இன்ஜினியர் தி கிராண்ட் அணைக்கட் என்று தன் வியப்பை உலகிற்கு வெளிச்சம் காட்டி இருக்கிறார்.இந்த அணையை பல இடங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் பார்க்க வருகின்றார்கள் இது ஒரு சுற்றுலா தலமாகவும் விளங்குகின்றது.

கல்லணை பற்றிய கட்டுரை

  • பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி வெள்ளம் வருவதனால் அதனால் மக்கள் துயரத்தில் இருப்பதனை கண்டு அதை தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையை கட்ட முடிவு செய்தார்.
  • இந்த அணை சுமார் 2000 ஆண்டுகளில் கற்களை களிமண்ணால் இணைத்து கிமு 1730 ஆம் ஆண்டு தலை தாவர பிசினால் கற்களை இணைத்தும் அணைகளை கட்டினார்கள் இவை தற்பொழுது இடிந்து போய் விட்டன.
  • ஆனால் 2200 ஆண்டுகளுக்கு முன் கற்களை களிமண்ணால் நேத்து கட்டி இன்னும் உறுதியாக பயன்பாட்டில் இருக்கும் ஒரே அணை இந்த கல்லணை.இதை உலகப் பொறியாளர்களால் பழந்தமிழரின் கட்டடக் கலையை அண்ணாந்து பார்க்க வைத்த அணையாகும்.
  • இந்த அணையை கட்டுவது சாதாரண விஷயம் அல்ல ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கன நீர் பாயும் காவிரி ஆற்றின் தண்ணீர் மேல் அணையை கட்டுவதற்கும் ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டது.
  • நம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலையினும் கால்களை தொட்டுச் செல்லும் அப்பொழுது பாதங்களின் கீழ் இருக்கும் மணல் அரிப்பு ஏற்படும் நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதைந்து விடும் இதைதான் கரிகால சோழன் பயன்படுத்தினார்.
  • காவேரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளை கொண்டு வந்து போட்டனர் அந்த பாறைகளும் நீரின் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து விட்டது.
  • இதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள் நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணை புதிய பாறைகளில் பூசி விடுவார்கள் தற்பொழுது இரண்டு பாறைகளும் ஒட்டிக் கொள்ளும் இப்படி பாறையின் மேல் பாறையை போட்டு படு வேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணை கல்லணை தான்.
  • இதனுடைய உண்மைகளை ஆங்கில பொறியாளர் ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டறிந்தார்கள்.அணைக்கட்டின் அடித்தளத்தில் 12 அடிவரை கொண்ட வேண்டி இருந்தன அப்பொழுது தான் அணையின் கட்டுமானத்தை கண்டறிந்தனர்.அந்த அணை மிகப்பெரிய பாறைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடிக்கி வைக்கப்பட்டதையும் இடைவெளியில் வெறும் களிமண் மட்டுமே இருப்பதையும் அறிந்தார்கள்.
  • மணலில் பெருங்கல்லை பதிக்க பள்ளம் தோன்றினாள் மணல் சரியும் நீர் சுரக்கும் என்று எதார்த்தத்தையும் மீறி யோசித்தார்கள்.இந்த அணை தற்பொழுது காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையாக இருக்கிறது.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR