Homeதமிழ்தமிழ் பழமொழிகள்-Proverbs In Tamil

தமிழ் பழமொழிகள்-Proverbs In Tamil

Proverbs In Tamil | தமிழ் பழமொழிகள்

Proverbs In Tamil:வணக்கம் நண்பர்களே.!! நம் வாழ்க்கையில் பல பல மொழிகளை பார்த்திருப்போம் கேட்டிருப்போம் ஏன் நம்ம கூட சில பேருக்கு பல மொழியை கூறியிருப்போம்.நம் முன்னோர்கள் நமக்கு பல பழமொழிகளை கூறியுள்ளனர். இப்பவும் நமது தாத்தா பாட்டி நாம் எந்த ஒரு செயல் செய்தாலும் அதற்கு ஒரு பழமொழி கூறுவார்கள்.அந்த பழமொழிக்கு நம் எதிர்த்து பேசினால் பழமொழி சொன்னால் அனுபவிக்கணும் ஆராயக்கூடாது என்று கூறுவார்கள்.

- Advertisement -

நாம் செய்யும் செயலுக்கு நமது நண்பர்கள் பழமொழி கூறுவார்கள் அதே போல் நாமும் அவர்களுக்கு பழமொழி கூற வேண்டும் என நினைப்போம் ஆனால் ஒரு சிலருக்கு பழமொழிகள் தெரியாது. இந்தப் பதிவில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பல மொழிகளை கொடுத்துள்ளோம் அது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள புகைப்படத்துடன் பழமொழிகளை இணைத்தும் கொடுத்துள்ளோம் அதை டவுன்லோட் செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி பயன்பெறுங்கள்.

தமிழ் பழமொழிகள்

Proverbs In Tamil And English

1.Put a beggar on horseback

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான்

2.Look before you leap

- Advertisement -

ஆழம் தெரியாமல் காலை விடாதே

3.New brooms sweep well

- Advertisement -

புதிய துடைப்பம் நன்றாக பெருக்கும்

Proverbs In Tamil

4.Tit for Tat

பழிக்கு பழி

5.Empty vessels make the most noise

குறைகுடம் கூத்தாடும்

6.East or West, Home is the best.

எலி வளையானாலும் தனி வளை வேண்டும்

Proverbs In Tamil

7.All that glitters are not gold

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

8.Barking dogs seldom bite

குரைக்கிற நாய் கடிக்காது

9.A young calf knows no fear

இளங்கன்று பயமறியாது

10.Covert all, lose all

பேராசை பெரு நட்டம்

11.A bad workman blames his tools

ஆட தெரியாதவள் தெருக்கோணல் என்றாள்

12.A wild goose never laid a tame egg

புலிக்குப் பிறந்தது பூனையாகாது

13.Pride comes before fall

அகம்பாவம் அழிவை தரும்

Proverbs In Tamil

14.A hungry man is an anfry man

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்

15.Habits Die Hard

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

16.Constant dripping wears away a stone

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

17.Bare words buy no barley

வெறுங்கை முழம்போடுமா?

18.Birds of a feather flock together

இனம் இனத்தைச் சேரும்

Proverbs In Tamil

 

19.Distance lends enchantment to the view

இக்கரைக்கு அக்கரை பச்சை

20.Charity begins at home

தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்

Simple Proverbs In Tamil

1.முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்

2.பாம்பின் கால் பாம்பறியும்

3.யானைக்கும் அடி சறுக்கும்

Add a subheading 12

4.புலி பசித்தாலும் புல் தின்னுமா?

5.மறப்போம் மன்னிப்போம்

6.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

7.காதலுக்கு கண் இல்லை

8.நொயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்

9.பதறிய காரியம் சிதறும்

10.விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு

11.வீட்டில எலி, வெளியில புலி

12.ஆபத்துக்கு பாவமில்லை

Proverbs In Tamil

13.அடியாத மாடு பணியாது

14.வரும் முன் காப்பதே சிறந்தது

15.பணம் பத்தும் செய்யும்

16.நெருப்பின்றி  புகையாது

17.வாய்மையே வெல்லும்

Proverbs In Tamil

18.ஒற்றுமையே பலம்

19.செய்யும் தொழிலே தெய்வம்

20.முதல் கோணல் முற்றும் கோணல்

Proverbs In Tamil

Proverbs InTamil With Meaning | தமிழ் பழமொழிகள் விளக்கத்துடன்

1.நல்ல மாட்டிற்கு ஒரு சூடு

நல்ல மாட்டிற்கு ஒரு சுவடு என்பதே உண்மையான பழமொழி. இதில் சுவடு என்ற வார்த்தை மருவி சூடு ஆகி விட்டது. சுவடு என்றால் கால் தடம் என்று பொருள். அந்த காலத்தில் சந்தையில் மாடு வாங்கும்பொழுது எந்த மாட்டின் கால் தடம் நன்றாக(அழுத்தமாக) இருக்கிறதோ அதுவே பலம் பொருந்திய மாடு என்பதை அறிந்து அதை வாங்குவது வழக்கம்.

2.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

அடி எனப்படும் இறைவனின் திருவடியில் சரண் புகுபவர்களுக்கு, அந்த இறைவன் உதவுவது போல அவனின் சொந்த அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.

3.கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

கடுகு என்னதான் அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம்(காரம்) என்பது போகாது. அதே போலவே யாரையும், எதையும் சிறியவை என எண்ணி ஒதுக்கிவிடாமல் இருந்தால் அதனால் பல நேரங்களில் மிகுந்த பலன் கிடைக்கும்.

4.தேரை இழுத்து தெருவில் விட்டது போல

மிக உயர்வானவற்றை தரம் தாழ்த்தி விட கூடாது.

5.அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல

உண்மையான பழமொழி என்னவென்றால் “அரசினை நம்பி புருசனை கைவிட்டது போல” என்பதே. அதாவது அந்த காலத்தில் பெண்கள் பிள்ளை பேரு வேண்டி அரச மரத்தினை சுற்றுவது வழக்கம். அப்படி அரச மரத்தினை மட்டும் சுற்றிவிட்டு புருசனை கவனிக்காமல் விட்டால் பிள்ளை எப்படி பிறக்கும் என்பதை கூறுவதற்காக சொல்லப்படுவதே இந்த பழமொழி.

6.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

இதன் உண்மையான பழமொழி, “கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை” அதாவது கழு என்பது ஒருவகை கோரைப்புல்லாகும். இந்த வகை புல்லை கொண்டு பாய் தைத்து படுத்தால் அந்த பாயில் கற்பூர வாசனை வீசுமாம்.

7.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

பள்ளிக்கூட பாட புத்தகத்தில் படித்த பழமொழிகளில், “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பதை அத்தனை எளிதாய் மறந்துவிட முடியாது.

8.சனிப் பிணம் தனியாகப் போகாதா?

சனிக்கிழமைகளில் யாரேனும் இறந்துவிட்டால், அந்தப் பிணம் தனியாகப் போகாது என்று பலபேர் சொல்லிக் கேட்டிருக்க முடியும்.

9.அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறக்குமா?

குறுகிய கண்ணோட்டம் கொண்ட சிலர், அப்பனைப் போலவே வந்து வாய்த்திருக்கிறான் என குழந்தைகளை மட்டம் தட்டுவதைப் பார்க்கிறோம். அப்பாவைப் போலவேதான் மகன் இருப்பான்

10.பெண்புத்தி பின்புத்தியா?

பாரதியாரோ, “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண்…” என்றார். ஆனால் பெண்புத்தி பின்புத்தி என்றும் பழமொழி உண்டு.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR