Homeதமிழ்பேரிச்சம்பழம் எப்போது சாப்பிட வேண்டும்

பேரிச்சம்பழம் எப்போது சாப்பிட வேண்டும்

பேரிச்சம்பழம் எப்போது சாப்பிட வேண்டும்

நாம் சாப்பிடும் எல்லாம் பழங்களும் நமக்கு நன்மை தரக்கூடிய பழமாகும் உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் உணவாகவும் உடலில் பல்வேறு குறைகளை  நீக்க உதவும் இந்த பழம்தான் பேரிச்சம்பழம்.

- Advertisement -

பேரிச்சம்பழம் சத்துக்கள்

பேரிச்சம் பழத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன இதில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன இந்தப் பழத்தை இஸ்லாமிய மதத்தில் விரதத்தை தீர்க்க பேரிச்சம்பழம் உண்ணப்படுகின்றன இராகில் தான் பேரிச்சம் பழத்தின் மரம் முதல்முறையாக உற்பத்தி செய்யப்பட்டது இந்தப் பழம் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் வரை சந்தைகளில் பிரசாக கிடைக்கும் ஏனெனில் அப்பதான் இந்தப் பழம் புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்படும

கருப்பு பேரிச்சம் பழத்தின் நன்மைகள்

சிலருக்கு உடலில் ரத்த அளவு மிகவும் குறைவாக இருக்கும் இதனால் ரத்த சோகை ஏற்பட்டு அவர்களால் நாள் முழுவதும் சோர்வாகவே காணப்படுவார்கள். இதற்கு நாள்தோறும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை சரி செய்யலாம்.  நீங்கள் பேரிச்சம் பழம் எடுக்கும் போது உடலில் உள்ள ரத்தத்தின் அளவை அதிகரித்து ரத்த சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தும். அது மட்டுமல்லாமல் பேரிச்சம் பழம் சாப்பிடும் போது புதிய ரத்தமும் உண்டாக்கும்  தோல் பகுதியை மிருதுவாகவும் வலுவலுப்பாகவும் இருக்கும்.

பேரிச்சம்பழம் சாப்பிடும்போது அத்ரிட்டிஸ், வாத நோய் போன்றவை சரி செய்ய உதவும். மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் நீக்கும் சக்தி பேரிச்சம் பழத்திற்கு உண்டு.பேரிச்சம் பழம் நம்மை தொற்று நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கிறது.

பேரிச்சம்பழம் எப்போது சாப்பிட வேண்டும்

- Advertisement -

 

பேரிச்சம் பழம் சாப்பிடும் முறை

பேரிச்சம்பழம் எப்போது சாப்பிட வேண்டும்

தினமும் இரவில் நம் படுக்கும் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் பால் காய்ச்சி அதனுடன் இரண்டு பேரிச்சம் பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும் எந்த நோயும் ஏற்படாது.

- Advertisement -

தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தின் நன்மைகள் பேரிச்சம் பழம் நன்மைகள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பேரிச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் அடிக்கடி பசி  ஏற்படுவதை தடுக்கும் அதனால் உடலில் எடையை குறைக்க உதவும். இதனால் நீங்கள் தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுடைய உடல் எடையை குறைக்கும்.

கருப்பு பேரிச்சம் பழத்தின் தீமைகள்

பேரிச்சம்பழம் நன்மை செய்யக்கூடியவை ஆனால் பேரிச்சம் பழம் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது அது விளைவுகளை உண்டாக்கி விடும். பேரிச்சம் பழத்தில் குளுக்கோசைவிட அடர்த்தியான சர்க்கரை நிறைந்துள்ளது. இதனால் டைப் டூ வகை நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை அதிகரித்து விளைவு ஏற்படும்.

பேரிச்சம் பழத்தில் காற்று அதிகமாக இருப்பதால் பற்களை சொத்தை ஆகி விடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது மேலும் பேரிச்சம் பழம் சில நேரங்களில் உடல் எடையை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

கர்ப்பிணி பெண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடும் போது கவனமாக சாப்பிட வேண்டும் தரமான பேரிச்சம் பழத்தை சாப்பிட வேண்டும். பேரிச்சம் பழத்தில் நார் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு பேரிச்சம்பழம் உகந்தது அல்ல, இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட அபாயம் உள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR