குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் | Kulanthai Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!தூங்கும்போது கனவு வருவது என்பது அனைவருக்கும் வழக்கமான ஒன்றாகும்.அந்த கனவில் நமக்கு நல்லது நடப்பது போல் வரலாம் கெட்டது நடப்பது போல் வரலாம்.
ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.ஆனால் அந்த பலன்களை எப்படி தெரிந்து கொள்வது ? நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் கனவுகளுக்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு வருகிறோம்.
உங்கள் கனவில் உங்களது குழந்தை அல்லது யாரோ ஒருவருடைய குழந்தையாக இருந்தாலும் சரி பொதுவாக குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக குழந்தை கனவில் வந்தால் நீங்கள் எதிர்பாராத பணவரவு உங்களை தேடி வரும்.உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் சேர்ந்து நீங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.
கைக்குழந்தை கனவில் வந்தால்
கைக்குழந்தை கனவில் வந்தால் சுப நிகழ்ச்சிகள் உங்கள் வீட்டில் நடைபெறும் மேலும் அதற்கான முயற்சிகளும் எடுப்பீர்கள்.அதாவது உங்கள் வீட்டில் திருமணம் அல்லது வீட்டில் ஏதேனும் விழாக்களை நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள்.
இரட்டை குழந்தை கனவில் வந்தால்
உங்களுக்கு இரட்டை குழந்தைகள் இருந்து அந்த குழந்தைகள் கனவில் வந்தாலும் அல்லது இரட்டைக் குழந்தைகள் கனவில் வந்தாலும் நீங்கள் தொழில் அல்லது வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அதில் முன்னேற்றம் அடைவீர்கள்.
நீங்கள் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் அடைவீர்கள்.படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
அம்மா கனவில் வந்தால் என்ன பலன் |
பெண் குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்
பெண் குழந்தை கனவில் வந்தால் திருமணம் ஆனவராக இருந்தால் சரி திருமணம் ஆகி கர்ப்பமாக அல்லது உங்கள் மனைவி கர்ப்பமாக இருந்தாலும் சரி உங்களை தேடி அதிர்ஷ்டம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
உங்கள் வாழ்வில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நீங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளால் உங்கள் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
ஆண் குழந்தை கனவு கண்டால் என்ன பலன்
பொதுவாக ஆண் குழந்தை கனவில் வந்தால் நீங்கள் ஒரே இடத்தில் வேலை செய்து கொண்டே இருப்பவர்களாக இருந்தால் அங்கு உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அதிகரிக்கும்.அல்லது நீங்கள் ஒரு தொழில் செய்து கொண்டிருந்தால் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை விட அதிகமாக கிடைக்கும்.
இறந்த குழந்தை கனவில் வந்தால்
இறந்த குழந்தை கனவில் வந்தால் அல்லது குழந்தை இறப்பது போல் கனவில் வந்தாலும் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். பிரச்சனைகள் என்றால் எப்படி இருக்கும் அதாவது நீங்கள் ஒரு புதிய தொழில் தொடங்க நினைத்து இருப்பீர்கள் அந்த தொழிலில் உங்களுக்கு லாபம் கிடைக்காமல் நஷ்டம் மட்டும் தான் கிடைக்கும்.
உங்கள் வீட்டில் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று கடவுளை வணங்குவதன் மூலம் உங்களுக்கு வரும் ஆபத்துக்கள் நீங்கிவிடும்.
அம்மா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் |
குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
குழந்தை இறப்பது போல் கனவில் வந்தால் அது உங்கள் குழந்தையாக கூட இருக்கலாம் அல்லது தெரியாத யாரோ ஒருவர் குழந்தையாக கூட இருக்கலாம் இந்த கனவை காண்பவருக்கு வரக்கூடிய பேராபத்தை உணர்த்துகிறது.
நீங்கள் ஒரு தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த தொழிலில் உங்களுக்கு லாபம் கிடைக்காமல் நஷ்டங்கள் கிடைக்கும்.உங்கள் கூட இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
ஆண்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
அப்பா கனவில் வந்தால் என்ன பலன் |
தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன் |
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |