Homeதமிழ்ஆதார் கார்டு Online பதிவிறக்கம் செய்வது எப்படி

ஆதார் கார்டு Online பதிவிறக்கம் செய்வது எப்படி

ஆதார் கார்டு மொபைல் பதிவிறக்கம் செய்வது எப்படி

ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான ஆவணமாக இருக்கின்றது.ஆதார் கார்டு இல்லை என்றால் இந்திய குடிமகனாக இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறுவார்கள்.இது வெறும் அடையாள அட்டை மட்டும் இல்லை அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் பல்வேறு விசேஷங்களுக்கு ஆதார் கார்டு மிக முக்கியமாக இருக்கிறது.

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து 1.96 பில்லியன் அங்கீகார பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள்.இது இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஆதாரின் பயன்பாடு ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சியை காட்டுகின்றது.இது அங்கீகார பரிவர்த்தனை எண்களில் பெரும்பாலானவை கைரேகையை பயன்படுத்தி மேற்கொள்கிறார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்ததாக ஒரு முறை வழங்கும் கடவுச்சொல் முக அங்கீகாரம் ஆகியவை இருக்கின்றது.ஏப்ரல் மாதத்தில் மக்களின் கோரிக்கையின் பெயரில் அதிகமான ஆதார் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.ஏப்ரல் மாதத்தில் ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை மைக்ரோ ஏடிஎம் நெட்வொர்க் மூலம் அதிகம் வங்கி பரிவர்த்தனைகள் செய்திருக்கின்றனர்.

ஆதார் கார்டு அனைத்து விசேஷங்களிலும் இணைக்கப்பட்டிருக்கிறது பான் கார்டு,மொபைல் நம்பர்,வங்கி கணக்கு எண்,மின்சார இணைப்பு,சிலிண்டர் இணைப்பு,ரேஷன் கார்டு போன்ற பல்வேறு விஷயங்களில் இணைக்க அரசு முடிவு செய்து இருக்கிறது.மிக முக்கியமாக வங்கி பருவர்த்தனைகளில் ஆதார் இன் பங்களிப்பு அதிகமாக இருக்கின்றது.இதனால் ஒவ்வொரு மாதமும் ஆதார் கார்டு அங்கீகாரம் பெற்ற பரிவர்த்தனைகளுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஆதார் கார்டு பதிவிறக்கம்

இந்தியாவில் அதிகம் ஆதார் அட்டை குடியிருப்புச் சான்றாக செயல்படுகின்றது.ஆதார் அட்டை மூலம் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

  • UIDAI என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
  • பிறகு எனது ஆதார் என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • டவுன்லோட் ஆதார் என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு உங்கள் ஆதார் எண்ணை தேர்ந்தெடுத்து 12 இலக்கு ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • உங்கள் ஆதார் எண்ணின் முழு விளக்கங்களை காட்ட விருப்பமில்லை என்றால் முகமூடி ஆதார் விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்சாவை உள்ளிட வேண்டும்.
  • பிறகு உங்கள் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும்.
  • பிறகு உங்களுடைய கணக்கெடுப்பை முடித்து விடும்.
  • பிறகு உங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து சரிபார்ப்பு பதிவிறக்கம் என்பதனை கிளிக் செய்து உங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஆதார் கார்டு பதிவிறக்கம்

ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி

ஆதார் அட்டை தொடர்பான புதிய தகவல்களை பார்ப்பதற்கு அரசு ஆதார அமைப்பின் UIDAI அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று பார்க்கலாம்.உங்கள் ஆதார் கார்டு ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி என்று தெளிவாக பார்ப்போம்.

- Advertisement -
  • முதலில் uidai.gov.in என்ற வரை தளத்தை திறந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு என்னுடைய ஆதார் என்பதை கிளிக் செய்ய பிறகு அதில் இருக்கும் டவுன்லோட் ஆதார் என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு ஒரு புதிய பக்கத்திற்கு செல்வீர்கள் அங்கு உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • உங்களுடைய முழு பெயர் குறியீடு மற்றும் பக்கத்தில் காட்டப்படும் கேட்சா ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
  • நீங்கள் பதிவு செய்த எண்ணிற்கு ஓடிபி வரும் அதனை உள்ளிட வேண்டும்.பிறகு டவுன்லோட் ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு உங்களுடைய ஆதார் அட்டை pdf வடிவத்தில் காண்பிக்கப்படும்.
  • அதனை பதிவிறக்கம் செய்யப்பட்ட பிடிஎஃப் ஃபைல் திறப்பதற்கு உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்து மற்றும் உங்கள் பிறந்த வருடம் ஆகியவற்றை கலவையாக ஒரு கடவுச் சொல்லை உள்ளிட வேண்டும்.

ஆதார் கார்டு பதிவிறக்கம்

ஆதார் கார்டு ஸ்டேட்டஸ்

ஆதார் அட்டை பதிவு நிலை தொடர்பான புதுப்பிப்புகளை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் 1947 என்ற எண்ணிற்கு டயல் செய்து UIDAI உருவாக்கப்பட்ட புதிய சேவைகளை கொண்டு குடியிருப்பாளர்கள் கட்டணமில்லா எண்ணிற்கு அழைக்கலாம்.இதில் மேலும் ஆதார் பதிவு நிலையை பிவிசி அட்டையின் நிலை ஆகியவற்றின் தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.சமீபத்தில் அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் அடிப்படையில் ஆன சாட் போர்ட் ஆதார் மித்ரவை அறிமுகம் செய்து இருக்கிறது.குடியிருப்பாளர்கள் தங்களுடைய குறைகளை கூற இதில் பதிவு செய்து கொள்ள முடியும்.ஆதார் பதிவு நிலை ஆதார் பிவிசி கார்டு நிலை கண்காணித்தல் ஆதாரம் மித்ரா மூலம் பதிவு மையத்தின் இருப்பிடத்தை நீங்களே அறிந்து கொள்ள முடியும்.

ஆதார் கார்டு லிங்க் வித் மொபைல் நம்பர்

நீங்கள் ஆதார் கார்டு எடுக்கும் பொழுது சிறிய குழந்தைகளாக இருந்தவர்களுக்கு தற்பொழுது முகமும் ரேகையும் மாறி இருக்கும் சிலருக்கு பிறந்த தேதி மாறி இருக்கும் முகவரி போன்ற பல தகவல்கள் மாறி இருக்கும். இது போன்ற ஆதார் அட்டைகளின் தனிப்பட்ட தகவல்களை மறுசீரமைக்க அரசு UIDAI என்ற ஆன்லைன் வலைதளத்தை தொடங்கி இருக்கிறது இதில் படிவத்தை டவுன்லோடு செய்து அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் மாற்ற நினைக்கும் தகவல்களை இதில் மாற்றிக் கொள்ள முடியும். தற்பொழுது உங்கள் ஆதார் அட்டையின் செல்போன் நம்பரை எப்படி மாற்றுவது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

- Advertisement -
  • UIDAI என்ற இணையதளத்தை திறந்து கொள்ள வேண்டும்.
  • நீங்கள் வைத்திருக்கும் செல்போன் நம்பரை பயன்படுத்தி உள்ளே செல்லவும்.
  • ஆன்லைன் ஆதார் சர்வீஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும் மொபைல் நம்பர் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதில் கேட்கப்படும் அனைத்து தகவல்கள் மட்டும் சரியாக நிரப்பி கொள்ள வேண்டும்.
  • உங்களுடைய புதிய செல்போன் இருக்கு ஓடிபி வரும் அதனை அந்த இணையதளத்தில் உள்ளிட்டு சேவ் ஃப்ரீ செட் என்பதனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

ஆதார் கார்டு பதிவிறக்கம்

ஆதார் கார்டு புதுப்பித்தல்

ஆதார் புதுப்பிப்பின் முதல் குறிக்கோள் போலி மற்றும் மோசடியான அடையாளங்களை தவிர்ப்பது மற்றும் எளிதில் சரிபார்க்கக் கூடியது நம்பகத்தன்மையுடன் இருப்பது போன்றவற்றையாக இருக்க வேண்டும் மக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை மேம்படுத்துவதின் மூலம் பெயர் முகவரி பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை முக்கியமான தகவல்களில் ஒன்றாக இருக்கின்றது எனவே இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.ஆதார் அட்டையை புதுப்பிக்கும் செயல்முறை பற்றி விண்ணப்பதாரர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR