Homeதமிழ் கட்டுரைகள்வீரமாமுனிவர் வரலாறு | ABOUT VEERAMAMUNIVAR IN TAMIL

வீரமாமுனிவர் வரலாறு | ABOUT VEERAMAMUNIVAR IN TAMIL

வீரமாமுனிவர் வரலாறு | ABOUT VEERAMAMUNIVAR IN TAMIL

வீரமாமுனிவர் என்பவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்.இவர் தமிழில் மொழியின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கும் சிறப்பாக செயல்பட்டவர்.மேலும் இவர் 23 நூல்களை தமிழில் எழுதி இருக்கின்றார்.அது மட்டும் இல்லாமல் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும்,இயேசுவின் வளர்ப்பு தந்தை ஆன புனித யோசப்பின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப தேம்பாவணி என்ற  பெருங்காவியத்தை இயற்றியுள்ளார்.

- Advertisement -

இவருடைய தமிழ் புலமைக்கு சான்றாக இருக்கின்றது.இவர் சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழ் புலமையை பெற்று உள்ளார்.மேலும் இவருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு

பெயர் வீரமா முனிவர்
இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
பெற்றோர் கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
பிறந்த ஊர் இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
அறிந்த மொழிகள் இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
தமிழ்க் கற்பித்தவர் மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்
சிறப்பு முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
காலம் 1680-1747

வீரமாமுனிவர் வரலாறு

வீரமாமுனிவரின் எழுத்து சீர்திருத்தம் செய்து சில குரலில் எழுத்துகளையும் நெடில் எழுத்துக்களையும் வேறுபடுத்தி மாற்றம் செய்து உள்ளார்.ஐந்து இலக்கணம் நூலான தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலை எழுதியுள்ளார்.இதனுடைய சிறப்பு கருதி இந்த நூலை குட்டி தொல்காப்பியம் என்று கூறுவார்கள்.

சதுர அகராதி என்னும் அகராதி நூலை வெளியிட்டு பிற்கால அகராதி நூல்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்துள்ளார்.தேம்பாவணி காப்பியத்திற்கு வீரமாமுனிவரே உரை வடிவமைத்துள்ளார்.திருச்சியை ஆண்ட சந்தா சாகிப்பிடம் திருவானாக பணிபுரிந்து இருக்கிறார்.இவர் மறைந்த இடம் அம்பலகாடு.தன்னுடைய பெயரில் முதன் முதலில் தைரியநாதர் என்று மாற்றி உள்ளார்.

- Advertisement -

வீரமாமுனிவரின் சிறப்பு பெயர்கள்

  • தமிழ் சிறுகதையின் முன்னோடி
  • தமிழ் உரைநடையின் தந்தை
  • இலக்கிய வழிகாட்டி
  • உரைநடை இலக்கிய முன்னோடி
  • செந்தமிழ் தேசிகர்
  • மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி
  • வீரமாமுனிவர்
  • தமிழ் அகராதியின் தந்தை
  • ஒப்பிலக்கண வாயில்
  • தொகுப்புப்பணியின் வழிகாட்டி

வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்

மொழி பெயர்த்த நூல்கள்
திருக்குறல் அறத்துப்பால்,பொருட்பால்
உரைநடை
வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்ந்த குருவின் கதை, வாமன் கதை
பிற நூல்கள்
திருக்காவலூர்க் ஊர்க் கலம்பகம்
கித்தேரி அம்மன் அம்மானை

வீரமாமுனிவர் வரலாறு

வீரமாமுனிவர் எழுத்து சீர்திருத்தம்

தமிழ்நாட்டில் அச்சிடல் வருவதற்கு முன்னால் பனை ஓலையில் எழுதுவதற்கு ஏற்றார் போல் இருந்தது தமிழ் எழுத்துக்கள் இதனை சிலவற்றை வீரமாமுனிவர் மாற்றி அமைத்திருந்தார்.ஏகார ஓவரா ஒலிகளை குறிக்க இரட்டை கொம்பு முறை எகர ஏகார ஒகர ஓகார முறைகளை வேறுபடுத்த காலில் கொம்புகளையும் சுழிகளையும் பயன்படுத்தினார்.நெடிலை சுட்டும் காலை வளைவு கொடுத்து ரகரத்திலிருந்து வேறுபடுத்தும் முறை ஆகியவற்றை மாற்றி அமைத்தார்.

வீரமாமுனிவர் வரலாறு

வீரமாமுனிவர் தமிழகம் வந்த பிறகு சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம் இலக்கியம் கற்று இலக்கிய பேருரைகளை நடத்தும் அளவிற்கு புலமை பெற்றிருந்தார்.இலக்கிய சுவடிகளை பல இடங்கள் சென்று தேடி எடுத்து வந்தாலும் சுவடி தேடும் சாமியார் என்றும் இவரை அழைக்கப்பட்டனர் இவற்றிற்கான அரிதான பல பொக்கிஷங்கள் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

- Advertisement -

தமிழரின் சிறப்பை மேலும் உயர்த்த திருக்குறள் தேவாரம் திருப்புகழ் நன்னூல் ஆத்திச்சூடி போன்ற நூல்களை ஐரோப்பிய மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.தமிழில் கற்க ஏதுவாக இருந்தாலும் தமிழ் லத்தின் அகராதியை உருவாக்கினார் இதில் ஆயிரம் தமிழ் சொற்கள் லத்தின் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.பிறகு 4400 சொற்களை கொண்ட தமிழ் போர்ச்சுகிசியா அகராதியை உருவாக்க தொடங்கினார்.

சதுரகராதியை மாற்ற முடிவு செய்தார் அந்த காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம் புள்ளைக்கு ஈடாக நீண்ட கோடி இருக்கும் மேல் குறில் நெடில் விளக்க என்று ராம் சேர்த்து எழுதுவது வழக்கம் என்று எழுத்துக்கள் இருந்தது. இந்த நிலையை மாற்றி ஆ ஏ என்று மாற்றம் செய்தார்.

வீரமாமுனிவர் வரலாறு

தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தது இவற்றை மக்கள் படித்தறிய எளிதில் முடியவில்லை என்பதனை உணர்ந்து உரைநடையாக மாற்றினார் வீரமாமுனிவர்.

தென்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை தொகுத்துள்ளார்.கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாக பேச்சு தமிழில் விரிவாக முனைந்து வந்தார்.ஒரு மொழியின் இலக்கணமாக அமையும் என்றாலும் இரட்டை வழக்கு வெளியான தமிழில் பேச்சு தமிழுக்கு இலக்கணம் அமைந்திருந்த காலத்தின் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியை தர வேண்டும்.

1742 ஆம் ஆண்டு மதுரை அணிதளம் விட்டு சென்ற வீரமாமுனிவர் கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்து பிறகு 1946 47 ஆண்டுகளுக்கு கேரளா நாட்டில் இருக்கும்.அம்பல காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்துவிட்டு 1747 ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தன்னுடைய 67 ஆம் வயதில் உயிரிழந்து விட்டார்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR