Homeதமிழ் கட்டுரைகள்அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு | Arignar Anna History in Tamil

அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு | Arignar Anna History in Tamil

அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு | Arignar Anna History in Tamil

அறிஞர் அண்ணா என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வர் ஆவார்.அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் முதலாவது முதலமைச்சரும் ஆவார்.இவரை அறிஞர் அண்ணா என்றும் பேரறிஞர் அண்ணா என்றும் அன்போடு அழைப்பார்கள்.இவர் இந்தியா குடியரசான பின் ஆட்சி அமைத்த காங்கிரசு அரசால் முதலாவது திராவிட கட்சி தலைவரும் அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் இவர்தான்.

- Advertisement -

அறிஞர் அண்ணாவின் ஆசிரியர் குறிப்பு

இயற்பெயர் காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை
பிறந்த நாள் 15 – -09 – 1909
பிறந்த ஊர் மெட்ராஸ் பிரசிடென்சி
சிறப்பு பெயர்கள் அறிஞர் அண்ணா,அரசியல்வாதி,பேரறிஞர் அண்ணா
மனைவி இராணி அண்ணாதுரை
எழுதிய நூல்கள் கபோதிபுரத்துக் காதல்,மாஜி கடவுள்கள்,கோமளத்தின் கோபம்,எட்டு நாட்கள்,ஆரியமாயை,எண்ணித் துணிக கருமம்,நீதிதேவன் மயக்கம்,தசாவதாரம்,கலிங்கராணி

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

  • போட்டியும் பொறாமையும்

பொய் சிரிப்பும் நிறைந்த

இந்த உலகத்தில் நம்

பாதையில் நாம் நேராக

நடந்து செல்ல நமக்கு

- Advertisement -

துணையாக இருக்க கூடியது

கல்வி மட்டுமே.

- Advertisement -
  • பழமை புதுமை என்ற

இரு சக்திக்கும் போர்

நடக்கின்றது.எழுத்தாளர்களின்

பேனா முனைகளே அப்போரில்

உபயோகமாகும்

போர்க் கருவிகள்.

  • எவ்வளவு

அலட்சியப்படுத்தினாலும்

அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும்

எடுத்த காரியத்தை முடித்தே தீருவது

என்ற திடமான கொள்கையும்

விடாமுயற்சியும் இருந்தால்

வெற்றி கிடைத்தே தீரும்.

அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு

  • ஓராயிரம் ஆபத்துக்கள்

ஓயாமல் நம்மை நோக்கி

வந்தாலும்.நம் உள்ளம் உண்மை

என்று உணர்ந்ததை உரைக்க

அஞ்சுபவன் கோழை மட்டுமல்ல

நாட்டுத் துரோகியும் கூட.

 

  • நான் எப்போதுமே கடவுளிடம்

உண்மையான நம்பிக்கையுடன்

வாழ்பவன்.

  • ஏழையின் சிரிப்பில்

இறைவனை காண முடியும்.

  • சிறந்த வரலாறுகளைப்

படித்தால் தான் இளம் மனதில்

புது வலிமை ஏற்படும்.

  • தன்னை வென்றவன்

தரணியை வெல்வான்.

  • நாள், கோள், நட்சத்திரம்,

சகுனம், சாஸ்திரம் அனைத்தையும்

மனித முயற்சிக்கு போடப்படுகிற

தடை கற்கள்.

  • பகைவர்கள் தாக்கி தாக்கி

தங்கள் பலத்தை இழக்கட்டும்..

நீங்கள் தாங்கி தாங்கி பலத்தை

பெற்றுங்கள்.

  • விதியை நம்பி மதியை

பறிகொடுத்து பகுத்தறிவற்ற

மனிதர்களாக வாழ்வது

மிக மிக தீங்கு.

அறிஞர் அண்ணா சாதனைகள்

அறிஞர் அண்ணா பொதுவாழ்வில் ஈடுபட்டு 35 ஆண்டுகளில் அவர் பேசிய மற்றும் எழுதிய ஏராளமாக இருக்கின்றது.

சொற்பொழிவுகள்  12775
கட்டுரைகள் 1960
சிறுகதைகள் 120
நவீனங்கள் 36
ஓரங்க நாடகங்கள் 60
கவிதைகள் 63
கடிதங்கள் 290
ஆங்கில கட்டுரைகள் 350
ஆங்கில கடிதங்கள் 1000
ஆங்கில சொற்பொழிவுகள் 350

அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு

அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு

அறிஞர் அண்ணா அவர்கள் 1963ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார்.நாடாளுமன்றத்தில் சென்னை மாகாணம் என்பதனை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் ஒன்றை அறிவித்தார்.இதற்கு காங்கிரஸ் பலத்தை எதிர்த்து தெரிவித்தது.எம் என் லிங்கம் என்ற உறுப்பினர் தமிழ்நாடு என பெயர் மாற்றினால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விடுவீர்கள் என்று கேட்டார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை ராஜ்யசபா இன்று மக்களவை லோக் சபா என்றும் ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்தி உள்ளீர்களே.இதனால் நீங்கள் கண்டன லாபம் என்ன பெற்றீர்கள் என்று அண்ணா கேட்டார்.காங்கிரஸ் உறுப்பினரிடம் இருந்து பதிலே வரவில்லை.

பிறகு அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது அவரின் பேச்சு எதிர்க்கட்சியினரும் ரசிக்கும்படி இருந்தது.ஒரு சமயம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து மிருக காட்சி சாலைக்கு நான் தந்த ஆண் புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை.ஆனால் எம்.ஜி.ஆர் தந்த பெண் புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்கப்படுகின்றது என்று குற்றம் சாட்டி இருந்தார்.

அப்பொழுது அறிஞர் அண்ணா குறுக்கிட்ட சம்மந்திகள் இருவரும் உட்கார்ந்து உங்கள் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சிரிக்கும்படி சொன்னார்.பெரியார் தன் முதுமை பருவத்தில் செய்து கொண்ட திருமணத்தினால் அறிஞர் அண்ணா அவருடன் முரண்பட்டார்.பெரியாரின் செயலால் கருத்து வேறுபாடு கொண்ட திராவிட கழகத்தினர் அண்ணா தலைமையில் திரண்டார்கள்.

பெரியாரின் செயலால் தொண்டர்கள் கண்ணீர் விடுவதாகவும் அந்த கண்ணீர் கடலாகி அதில் பெரியார் மூழ்குவதாகவும் அட்டைப்படம் வெளியிட்டது திராவிட நாடு.இதனால் மிகவும் கோபமான பெரியார் அண்ணாவின் ஆதரவாளர்களை கண்ணீர் துளிகள் என்று கிண்டல் அடித்தார்கள்.பிறகு திமுக கழகம் உருவானது.ஆனால் பெரியாரே தரம் தாளாமல் விமர்சனம் செய்து கண்ணியம் காத்த அறிஞர் அண்ணா.

அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு

அறிஞர் அண்ணா ஓர் எழுத்தாளர் மட்டும் இல்லாமல் நடிகரும் கூட ஆவார்.இவர் எழுதிய சந்திரோதயம் சந்திரமோகன் போன்ற நாடகங்களில் நடித்து உள்ளார்.புகழ் பெற்ற சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஆனால் அதில் எம் ஜி ஆர் ஒப்பந்தமானார்.ஆனால் என்ன காரணமும் தெரியலை அதில் நடிக்க முடியாத சூழல் உருவானது.

அப்பொழுது அந்த கதாபாத்திரத்திற்கு தனது இல்லத்தில் தங்கி இருந்த கணேசன் என்ற நாடக நடிகரை நடிக்க வைத்தார் அறிஞர் அண்ணா.அந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.ஒரு நாள் அந்த நாடகத்தை காண வந்த பெரியார் கணேசனின் நடிப்பை கண்டு வியந்து நாடகம் நடந்த இரண்டரை மணி நேரம் கணேசனை காணவில்லை சிவாஜியை கண்டு என்று கூறினார்.அந்த நடிகர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR