Homeமருத்துவம்Ash Gourd in Tamil | வெண்பூசணி பயன்கள்

Ash Gourd in Tamil | வெண்பூசணி பயன்கள்

Ash Gourd In Tamil

Ash Gourd in Tamil:வெள்ளை பூசணி பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது.இது பலவிதமான நோய்களுக்கு தீர்வாக இருக்கும் ஒரு காய் என்றாலும் அது பூசணிக்காய் என்று அனைவரும் கூறுவார்கள்.இது குறிப்பாக மஞ்சளாக இருக்கும் இனிப்பு பூசணியை விட வெள்ளை பூசணையில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம் இருக்கின்றது. மாவுசத்து இதில் இருக்காது.இதனை தினமும் வெறும் வயிற்றில் ஜூஸ் செய்து குடித்தால் உடல் சுத்தமாகும்.இதில் இன்னும் நிறைய நன்மைகள் இருக்கின்றது அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

- Advertisement -

Ash Gourd In Tamil Name

பெனின்கசா ஹிஸ்பிடா என்ற தாவர பெயர் கொண்ட வெள்ளை பூசணிக்காய் பெரும்பாலும் இது இந்தியா மற்றும் சீனாவில் சமைத்து உண்ணப்படும் ஒரு தனித்துவமான பூசணிக்காய் வகைகள் ஆகும்.இது பெரும்பாலும் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு ஆசிய சமையலில் சூப்களில் சேர்க்கப்படுகின்றது.இது இந்திய யோகிகள் நீண்ட காலமாக வெள்ளை பூசணிக்காயை மிகவும் இயற்கையான உணவுகளாக கருதப்படுகின்றார்கள்.ஏனெனில் இது யோக விஞ்ஞானத்தில் ப்ராணா என்று குறிப்பிடுவது வெள்ளைப் பூசணிக்காய் அதிகளவில் பயன்படுகிறது.

வெள்ளை பூசணிக்காயின் பொதுவான பெயர்கள்:

  • வெள்ளை பூசணி
  • விண்ட்டர் மெலன்
  • வேக்ஸ் கார்ட்
  • குஷ்மண்டா
  • பேத்தா
  • டோரோபோட்
  • கோஹ்லா
  • நீர் பூசணிக்காய்
  • கும்பளங்கா
  • பூடிடா
  • கும்மடிக்காயா
  • பூடு கும்பலா
  • கும்ரா
  • கோம்ரா

வெள்ளை பூசணிக்காய் மெல்லிய ரோமம் போன்ற அமைப்புகளால் இருக்கும்.இது வெள்ளை பூசணிக்காய் பழுக்கும்போது மறந்து விடுகிறது.இது வெளிப்புற நிறம் அடர் பச்சை நிறத்திலிருந்து வெளிர் சாம்பல் நிறம் வரை மாறுபடுகிறது முதிர்ந்த வெள்ளை பூசணிக்காயின் மேல் ஒரு தனித்துவமான வெள்ளை சாம்பலாக இருக்கும்.இந்த சாம்பல் பூசணிக்காய் ஆங்கிலத்தில் ஆஸ் கார்டு என்று குறிப்பிடப்படுகின்றது.வெள்ளை பூசணிக்காயின் வடிவம் வட்டம் மற்றும் நீள்வட்டத்திற்கு இடையில் மாறுபடுகின்றது.

வெள்ளை பூசணிக்காயின் சுவை வெள்ளரிக்காய் போல் மிகவும் அருமையாக இருக்கும்.இதற்கு சொந்தமான சுவை ஏதுமில்லை எனவே வெயில் அதிகமான நாட்களில் அனைத்து வகையான சாலடுகள் பழக்கூல் மற்றும் பழச்சாறுகளை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.குளிரான நாட்களில் வெள்ளை பூசணிக்காயுடன் தேன் அல்லது கருப்பு மிளகு சேர்த்து பழத்தின் குளிரூட்டும் தன்மையை குறைத்து அதே நேரத்தில் அதன் அடிப்படை சக்தியை தக்க வைத்துக் கொள்கிறது.மேலும் அதிகபட்ச உயிர் சக்தியை தக்க வைத்துக் கொள்ள வெள்ளைப் பூசணிக்காயை பச்சையாக சாப்பிட வேண்டும்.

Ash Gourd in Tamil

- Advertisement -

வெள்ளை பூசணிக்காயில் பிரதானமான நீரினால் ஆனது இது வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின்,தியமின் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகையான வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்திருக்கிறது.இரும்பு,பொட்டாசியம்,துத்தநாகம்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் மதிப்புமிக்க ஆதாரமாக வெள்ளை பூசணிக்காய் இருக்கின்றது.இதில் போதுமான அளவு புரதம்,கார்போஹைட்ரேட் மற்றும் உணவாக கூடிய நார்ச்சத்து ஆகியவை இதில் இருக்கின்றது.

வெண்பூசணி மருத்துவ வெண்பூசணி பயன்கள்

வெள்ளை பூசணிக்காயின் நன்மைகள்

வெள்ளை பூசணி க்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்.இது பெரும்பாலான நாகரீகம் என்ற பெயரில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை கடைப்பிடித்து வருகின்றது.வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் இவர்களுக்கு ஒரு மந்திர மருந்து போல் செயல்படுகின்றது.இது உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகின்றது மற்றும் சிறுநீர்ப்பை வழக்கமான செயல்பாட்டை வழங்குகின்றது.

- Advertisement -

வெள்ளை பூசணி வயிற்றுப்போக்கு

இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகின்றது.மேலும் இதனால் இருமல் மற்றும் சளி போன்ற மாறிவரும் காலநிலை நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருந்தாகவும் வெள்ளை பூசணிக்காய் பயன்படுத்தப்படுகின்றது.மிசோரமில் லுஷே போன்ற பழங்குடியினர் கடுமையான வயிற்றுப்போக்கு பிரச்சனைகளால் சரி செய்ய வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் மற்றும் சூப்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கின்றார்கள்.

வெள்ளை பூசணி எடை இழப்பு

வெள்ளைப் பூசணிக்காயில் கலோரிகள் மிக மிக குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதினால் கூடுதல் எடையை விரைவாக குறைக்க இந்த ஜூஸ் உதவியாக இருக்கின்றது.இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதனால் நீண்ட நேரத்திற்கு பசியை தூண்டுவதில்லை.இதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விரைவாக எடையை குறைக்க உதவியாக இருக்கிறது.

வெள்ளை பூசணி உடல் குளிர்ச்சி

அனைவருக்கும் குளிர்ச்சி காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் உடலில் உண்டாகும் அதிகப்படியான சூட்டின் காரணமாக நிறைய உடலியல் பிரச்சனைகளை சந்திக்க இருக்கும்.இந்த உடல் சூட்டை அதிகரிக்க அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு கூட மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது.இப்படி உடல் சூடு அதிகமாக இருப்பதனால் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் சிறந்த காய்கறியாகும் ஏனெனில் இது உடலுக்கு குளிர்ச்சியை தருகின்றது.இதில் நீர்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதனால் உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் விளைவை கட்டுப்படுத்தி அஜீரணம் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்கின்றன.

புத்துணர்ச்சியாக வைக்க

வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் அதிகம் கால்சியம்,துத்தநாகம்,பாஸ்பரஸ் போன்ற அடுத்த வகையான ஊட்டச்சத்துக்களும் தியாமின்,ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின்கள் நிறைந்து இருக்கும் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் ஆற்றல் மட்டங்களை பெரிதும் அதிகரிக்கின்றது.இது உடல் சோர்வை போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றது.

குடல் இயக்கத்தை மேம்படுத்த

அஜீரண கோளாறு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிக சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது இந்த வெள்ளை பூசணிக்காய் ஜூஸ்.வயிற்றுப் பகுதியில் உண்டாகும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து பிற நோய்களை தாக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் இந்த வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் ஊக்குவிக்கின்றது.இது குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றது.

வெள்ளை பூசணி மனநிலை அமைதி

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல மன ஆரோக்கியத்திற்கும் வெள்ளை பூசணிக்காய் உதவுகின்றது.மன அழுத்தம்,மனபதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவுகின்றது.இதில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் கார்டிசோல் உற்பத்தியை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகின்றது.இதோடு மட்டுமில்லாமல் இன்சோம்னியா இன்னும் தூக்கமின்மை மற்றும் மனப்பதற்றம் ஒன்று பிரச்சினைகளை குறைத்து மன அமைதியை ஏற்படுத்துகின்றது.

வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் செய்வது எப்படி?

  1. வெள்ளை பூசணி – 1 கப்
  2. இஞ்சி – ஒரு இன்ச் அளவு
  3. பூண்டு – 2 பல்
  4. உப்பு – சிறிதளவு
  5. எலுமிச்சை பழம் – 1
  6. தேன் – 1 ஸ்பூன்
  7. புதினா இலைகள் – 5

முதலில் வெள்ளை பூசணிக்காயின் மேல் உள்ள தோலை சீவிய பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு வெள்ளை பூசணி உடன் பூண்டு இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜூஸை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்ட வேண்டும்.எலுமிச்சை ஜூஸ் கருப்பு உப்பு தேன் மற்றும் புதினா இலைகள் உள்ள மீதமுள்ள அனைத்து பொருள்களையும் சேர்த்துக் கொண்டு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு பூசணி ஜூஸ் தயார்.இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதனால் நிறைய பலன்களை பெறமுடியும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR