Homeதமிழ் கட்டுரைகள்பாரதிதாசன் வரலாறு | Bharathidasan History In Tamil

பாரதிதாசன் வரலாறு | Bharathidasan History In Tamil

பாரதிதாசன் வரலாறு | Bharathidasan History In Tamil

பாரதிதாசன் கனகசுப்புரத்தினம் என இயற்பெயர் கொண்ட இவர் பாரதிதாசன் என்ற பெயர் மூலம் அறியப்படுவார். பாரதிதாசனை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவரின் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -
பாரதிதாசன் பிறப்பு

பாரதிதாசன் இந்தியா புதுவையில் கனகசபை முதலியார் மற்றும் லக்குமி அம்மாள் இருவருக்கும் மகனாக ஏப்ரல் 29 1891 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் தந்தை வணிகத் துறையில் பணியாற்றி வந்தார்

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

பாரதிதாசன் பிறந்த காலத்தில் பிரெஞ்சுகாரர்கள் பாண்டிச்சேரியை ஆக்கிரமித்து இருந்தார்கள் அதனால் அவர் சிறுவயதில் பிரஞ்சு மொழி பள்ளியில் பயின்றார். இருந்தாலும் தமிழ் மொழி மீது கொன்ற பற்றாள் தமிழ் மொழியில் படித்த காலமே அதிகமாக இருந்தது. இவர் கல்வே கல்லூரியில் தமிழ் மொழியை முதன்மை பாடமாக கொண்டு படித்தார்.

பாரதிதாசன் தனது 18 வயதில் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றினார். சிறுவயதிலே இசை உணர்வும் நல்லெண்ணமும் கொண்ட இவர் சிறு சிறு பாடல்களை எழுதி தனது நண்பர்களுக்கு பாடி காட்டுவார்.பாரதிதாசன் தனது நண்பரின் ஒருவரின் திருமணத்திற்கு சென்ற போது சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டு பாடலை பாடினார்.

அந்த திருமணத்திற்கு பாரதியாரும் வந்திருந்தார் ஆனால் பாரதியார் வந்திருப்பது பாரதிதாசனுக்கு தெரியாது. பாரதியாரின் பாடலை பாடியதன் மூலம் பாரதிதாசனுக்கு பாரதியார் அறிமுகமானார்.தந்தை பெரியார் மீது கொண்ட பற்றாள் கடவுள் மறுப்பு,சாதி மறுப்பு,மத எதிர்ப்பு போன்றவற்றை தனது பாடல் மூலம் உணர்த்தினார்.

- Advertisement -

பிரபல எழுத்தாளராகவும்,திரைப்பட கதாசிரியராகவும் பாரதிதாசன் சிறந்து விளங்கினார்.இது மட்டும் இல்லாமல் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு பாரதிதாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாரதிதாசன் வரலாறு | Bharathidasan History In Tamil

- Advertisement -
பாரதிதாசனின் திருமண வாழ்க்கை

பாரதிதாசன் தனக்கு கல்லூரியில் ஆசிரியர் வேலை இடத்த அடுத்த ஆண்டு பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாரதிதாசனுக்கும் பழநி அம்மையாருக்கும் சிவசுப்பிரமணியன் மன்னர் மன்னன் என்ற ஒரு மகனும் சரஸ்வதி, கண்ணப்பன் வசந்தா, தண்டபாணி ரமணி என்ற மூணு மகள்களும் பிறந்தனர்

பாரதியார் மீது பாரதிதாசனுக்கு இருந்த பற்று.

தமிழ் மீது அதிக அளவு பற்று கொண்டதால் சுப்ரமணிய பாரதியாரை தனது குருவாக கருதினார். பாரதியாரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த போது தனது நண்பரின் திருமணத்தில் பாரதியாரின் பாடலை பாரதிதாசன் பாடினார் அந்த திருமண விழாவிற்கு பாரதியாரும் வந்திருந்தார்.

பாரதிதாசன் பாடியதை கவனித்த பாரதியார் பாராட்டினார். பாராட்டியது மட்டுமில்லாமல் அவருடைய நட்பும் அவருக்கு கிடைத்தது அன்று முதல் கனகசுப்புரத்தினம் என்ற தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசனின் நூல்கள்

பாரதிதாசன் 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார் அதில் ஒரு சில நூல்களின் பெயர்களை கீழே கொடுத்துள்ளோம்.

இன்பக்கடல்
அழகின் சிரிப்பு
இருண்டவீடு
உலகம் உன் உயிர்
எதிர்பாராத முத்தம்
ஏழைகள் சிரிக்கிறார்கள்
கற்கண்டு
காதல் நினைவுகள்
காதல் பாடல்கள்
குயில் பாடல்கள்

 

பாரதிதாசன் வரலாறு | Bharathidasan History In Tamil

பாரதிதாசனின் திரையுலாக பங்கு

பாரதிதாசன் நூல்கள் எழுதியது மட்டுமில்லாமல் 1937 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் திரைக்கதை உரையாடல் பாடல் பட தயாரிப்பு என தனது பங்காற்றலை திரைப்படத்துறைக்கு கொடுத்து தனது வாழ்வின் இறுதி நாளை கழித்தார்.

இராமானுஜர்
பாலாமணி அல்லது பக்காத்திருடன்
சுலோசனா
பொன்முடி
பாண்டியன் பரிசு
குமரகுருபரர்
வளையாபதி
பெற்ற மனம்
நிஜங்கள்
நம்மவீட்டு தெய்வம்
பாரதிதாசனின் கட்டுரைகள்

பாரதிதாசன் 40-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார் அதில் ஒரு சில கட்டுரைகளின் பெயர்களை கீழே கொடுத்துள்ளோம்.

பெண்களின் சமத்துவம்
கடவுள் ஒன்று
குழந்தை இந்தியா
ஜாதிச் சண்டை
தமிழன் யார்?
சீர்திருத்தக்காரர்களின் கஷ்டம்
சாதி ஏன்?
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்
கடவுள் சிருஷ்டியா?
அம்மியும் நகரும்
பாரதிதாசனை பற்றி வந்த நூல்கள்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ரஜித்
1945
மின்னல் பதிப்பகம்
புஸ்லி வீதி
புதுச்சேரி
பாரதிதாசனின் ஆக்கங்கள்

பாரதிதாசன் தனது எண்ணங்களை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக கவிதை இசை பாடல் நாடகம் சிறுகதை கட்டுரை ஆகியவாடிவில் வெளியிட்டுள்ளார்.அதில் சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்.

அம்மைச்சி
உரிமைக் கொண்டாட்டமா?
எது பழிப்பு
பெண்கள் விடுதலை
விடுதலை வேட்கை
ரஸ்புடீன்
சத்திமுத்தப் புலவர்
கழைக்கூத்தியின் காதல்
கலை மன்றம்
கற்புக் காப்பியம்
பாரதிதாசன் இறப்பு

ஏப்ரல் 21 1964 ஆம் ஆண்டு பாரதிதாசன் தனது 72 வது வயதில் தமிழ்நாடு சென்னையில் காலமானார்.

இவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

பாரதியார் பற்றிய முழு விவரம்
வள்ளலார் வரலாறு
அப்துல் கலாம் வரலாறு
கம்பர் பற்றிய முழு விவரம்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR