Homeதமிழ்குடிநீர் வசதி வேண்டி கடிதம் எழுதுவது

குடிநீர் வசதி வேண்டி கடிதம் எழுதுவது

குடிநீர் வசதி வேண்டி கடிதம் எழுதுவது

குடிநீர் வசதி வேண்டிய விண்ணப்பம் கடிதம் எழுதுவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா உங்கள் ஊரில் அல்லது நீங்கள் வசிக்கும் தெருவில் நீங்கள் இருக்கும் மாவட்டத்தில் குடிநீர் வசதி இல்லை என்றால் சரியாக கிடைக்கவில்லை நீங்க கருதினால் இந்த  விண்ணப்பம் உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும்

- Advertisement -

பொதுவாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் குடிநீர் வசதி கிடைக்கும் ஏதேனும் ஒரு சில காரணத்தினால் ஒரு சில மாவட்டங்கள் ஒரு சில கிராமங்களில் குடிநீர் வசதி இல்லாமல் இருக்கும்.

அதை நீங்கள் உங்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் கவுன்சிலரிடமோ உங்கள் MLA இடமோ குடிநீர் வசதி வேண்டிய விண்ணப்பம் கடிதம் எழுதி தெரிவித்து உங்கள்  ஊரில் குடிநீர் வசதியை கொண்டுவர விண்ணப்பிக்கலாம் நாங்கள் கீழே விண்ணப்பம் எப்படி எழுத வேண்டும் என்று கொடுத்துள்ளோம் அதை பார்த்து நீங்கள் எழுதி அவர்களிடம் மனுவாக கொடுக்கலாம்

குடிநீர் வசதி வேண்டி மாநகராட்சி அலுவலருக்கு கடிதம்

அனுப்புநர்

உங்கள் பெயர்,

- Advertisement -

முகவரி,

மாவட்டம்.

- Advertisement -

பெறுநர்

நகராட்சி ஆணையர் அவர்கள்,

நகராட்சி  ஆணையர் அலுவலகம்,

நகராட்சியின் பெயர்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்

பொருள்: குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்

நாங்கள் வசிக்கும் பகுதி (பகுதியின் பெயர்), எங்கள் பாகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தினசரி குடிநீர் தேவைக்கே அவதியுறும் நிலை உள்ளது.எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு,

உங்கள் பெயர்

குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம் ஊராட்சி மன்றத் தலைவர்

அனுப்புநர்

பெயர்,

முகவரி,

இடம்.

பெறுநர்

ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள்,

ஊராட்சி மன்ற அலுவலகம்,

கிராமத்தின் பெயர்,

ஊராட்சியின் பெயர்.

ஐயா,

வணக்கம், எங்கள் தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.இதனால் தண்ணீர் இன்றி எங்கள் தெருவில் வசிப்போர் துன்பப்படுகின்றனர்.எனவே உடைந்து போன குடிநீர் குழாயை சரி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,

பெயர் (××××)

குடிநீர் வசதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு

அனுப்புநர்

உங்கள் பெயர்,

முகவரி,

வசிக்கும் இடம்,

வட்டம்,

மாவட்டம்.

பெறுநர்:

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

மாவட்டத்தின் பெயர்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்

வணக்கம்,எங்கள் ஊர் (ஊரின் பெயர்), எங்கள் ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தினசரி குடிநீர் தேவைக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் சென்று எடுத்து வர வேண்டியுள்ளது.எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.(உங்கள் பிரச்சினைகளை தெளிவாக விளக்கவும்)

இப்படிக்கு,

உங்கள் பெயர்

இடம்:

தேதி:

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR