Homeதமிழ்மாணிக்கவாசகர் வரலாறு | Manikkavasagar History in Tamil

மாணிக்கவாசகர் வரலாறு | Manikkavasagar History in Tamil

மாணிக்கவாசகர் வரலாறு | Manikkavasagar History in Tamil

மாணிக்கவாசகர் சைவ சமய குறவர்கள் நால்வரில் ஒருவர் அவர்.முந்தைய மூவரும் தேவாரம் பாடி இருக்க இவர் பாடிய நூல்களான திருவாசகமும் திருக்கோவையாரும் ஆகும்.இவர் பொ.ஊ.ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர்.இவர் அரிமரத்தன பாண்டியனிடம் தலை அமைச்சராக பணியாற்றியவர்.மாணிக்கவாசகர் சிறந்த சிவபக்தர் இரண்டாம் வரகுணன் காலத்தில் வாழ்ந்தவர் ஆவார்.

- Advertisement -

இவர் பாடிய பாடல்கள் திருவாசகம் என்று அழைக்கப்படுகின்றது.பக்தி சுவையையும் மனதை உருக்கும் தன்மையையும் கொண்டு இருக்கிறது.தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து பார்க்கப்படுகிறது.கற்ற மாணவர் ஜி யு போப் இதற்குத்தக்க சான்றாக விளங்குகிறார்.மேலும் இவரைப் பற்றி முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மாணிக்கவாசகர் ஆசிரியர் குறிப்பு

இயற்பெயர் – திருவாதவூரடிகள்

பெற்றோர் பெயர் – சம்பு பாதசாரியார், சிவஞானவதியார்

பிறந்த ஊர் – பாண்டி நாட்டு திருவாதவூர்

- Advertisement -

வாழ்ந்த காலம் – 32 ஆண்டுகள்

பாடிய நூல்கள் – திருவாசகம், திருக்கோவையார்

- Advertisement -

மாணிக்கவாசகர் வரலாறு

மாணிக்கவாசகர் வேறு பெயர்கள்

  • திருவாதவூரார்
  • தென்னவன் பிரம்மராயன்
  • அழுது அடி அடைந்த அன்பர்
  • வாதவூர் அடிகள்
  • பெருந்துறை பிள்ளை
  • அருள்வாசகர்
  • மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள்

  • திருவாசகம்
  • திருக்கோவையார்
  • திருவெம்பாவை
  • போற்றி திருவகவல்

மாணிக்கவாசகர் வரலாறு

செந்தமிழ் மணமும் சிதம்பரமும் இருக்கும் திருநாடு தென்பாண்டி வள நாடு ஆகும்.இந்த நாட்டை ஆட்சி செய்வது புனல்யாறு அன்று இது பூம்புனல்யாறு இன்று புலவர்கள் போற்றப்படும் வையை ஆறு ஆகும்.இந்த நதி வரலாற்று சிறப்பும் புராண கதை சிறப்புகளையும் கொண்டு இருக்கிறது.

மாணிக்கவாசகர் திருவாதவூர் என்ற பாண்டிய நாட்டில் சம்பு பாத சரித்தறுக்கும் சிவஞானவதிக்கும் மகனாக பிறந்தவர்.இவர் கல்வி கேள்விகளில் சிறந்து மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக பணியில் அமர்த்தினார்கள்.

அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாக கொண்டு ஆண்டு வந்தார் தன்னுடைய புலமையால் தென்னவன் பிரம்மராயன் என்னும் பட்டத்தையும் பெற்றார்.பிறகு உயர்ந்த பதவி செல்வம் செல்வாக்கும் எல்லாம் இருந்தபோது இதை வாழ்வில் இறுதி நோக்கமல்ல என்பதனை உணர்ந்தார்.

திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை மேற்கொண்டு வந்தார்.ஐந்து எழுத்தில் இருக்கும் உண்மையினை திருவருளால் தெளிந்து உணர்ந்து பிறகு தனித்தமிழ் மந்திரம் எனப்படும் திருவாசகப் பாடலை நமச்சிவாய வாழ்க இன்று தொடங்கி பாடி இருக்கிறார்.

இதனைக் கேட்ட சிவபெருமான் இந்த பாடல்களில் இருக்கும் வார்த்தைகள் மாணிக்கம் போல் ஜொலிக்கின்றது.அதனால் இன்று முதல் நீ மாணிக்கவாசகர் என்று திரு பெயரால் அழைக்கப்படுவாய் என்று கூறிவிட்டு மறைந்து சென்றார் சிவபெருமான்.

மாணிக்கவாசகரும் இறை பணியாற்றிய தொண்டில் ஈடுபட்டு ஆண்டவனின் ஆணைப்படி உடன் கொண்டு வந்த பொருளை அனைத்தையும் செலவு செய்து திருப்பெருந்துறையில் சிறந்த சிவன் கோயிலை கட்டினார்கள்.எஞ்சிய பொருளை சிவனடியார்களுக்கு செலவு செய்தார்கள்.

மாணிக்கவாசகர் வரலாறு

நரியை குதிரை ஆக்கிய சிவபெருமான்

இதனை கேள்விப்பட்டேன் பாண்டிய அரசன் மாணிக்கவாசகரை பாண்டிய நாட்டிற்கு வரும்படி ஆணையிட்டால் அவரும் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர அவரிடம் குதிரை எங்கே என்று கேட்டார்.பாண்டியன் அதற்கு பதில் அளிக்காததனால் பணத்தை தரும்படி கேட்டார்.என்ன செய்வதென்று அறியாமல் நின்று கொண்டிருந்த மாணிக்கவாசகர் இறைவனிடம் தன்னை காப்பாற்றுமாறு வேண்டினார்.

ஆண்டவர் அவரிடத்தில் ஆவணி மூலத்தில் குதிரை வந்து சேரும் என்று கூறுவாயாக என்று சொன்னார்.அவ்வாறு மாணிக்கவாசகர் குதிரைகள் ஆவணி மூலத்தில் வரும் என்று மன்னரிடம் கூறினால் மற்றவைகள் மூலம் குதிரைகள் வாங்காத செய்தியை அரசன் உணர்ந்தார் காவலரை கொண்டு மாணிக்கவாசகரை கடுமையாக கண்டித்தார்.அவரும் ஆண்டவனிடத்தில் முறையிட்ட வேண்டினார்.

சிவபெருமான் ஒரு ஆவணி மூலதென்று நரிகளை குதிரைகளாக கொண்டு வந்து அரசனிடம் ஒப்படைத்து மாணிக்கவாசகரை காப்பாற்றினார்.மறுநாள் குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறிப் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது.தன்னை மாணிக்கவாசகர் ஏமாற்றிவிட்டார் என்று மன்னனுக்கு மீண்டும் அவர் மீது கோபம் ஏற்பட்டது.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பாண்டிய மன்னன் கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பி தரும் வரை மாணிக்கவாசகரை வைகை ஆற்று சூடு மணலில் நிறுத்தி வைக்குமாறு காவலர்களிடம் கூறினார்.சிவபெருமானும் அடியே வரேன் துன்பத்தைக் கண்டு வழிகாட்டி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார்.

கரையை உடைத்துக் கொண்டு ஆறு பெருக்கெடுத்து ஓடியது இதனை கண்ட பாண்டிய மன்னன் வீட்டிற்கு ஒரு ஆள் வந்து இந்த கரையை அடக்க வேண்டும் என்று உத்தரவு விட்டார்.வந்தி என்னும் பிட்டு விற்கும் கிழவியின் வயது மூப்பு காரணமாக சிவபெருமான் அவள் சார்பில் வந்து சரியாக வேலை செய்யாமல் கால விரயம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

அதனால் கரையில் மற்றவர் பங்கு நடைபெற்று இருந்தது ஆனால் வந்தியின் பகுதி உடைந்து இருந்தது.இதனை கண்ட பாண்டிய மன்னன் கோபம் கொண்டு கூலி ஆளை பிரம்பால் அடித்தார்.கூலி ஆள் ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது சரியாகி விட்டது.

கூலியால் உருவத்தில் இருந்தது சிவபெருமான் மேல்பட்ட அடி பாண்டிய மன்னன் முதலாக எல்லா உயிர்களும் மேலும் பட்டது.சிவபெருமானும் மறைந்துவிட்டார் அரசனும் உண்மையை உணர்ந்து மாணிக்கவாசகர் திருவடிகள் விழுந்து வணங்கினார்.அவரும் மன்னனிடம் விடை பெற்று தல யாத்திரை மேற்கொண்டார்.

மாணிக்கவாசகர் வரலாறு

இறைவனிடம் அர்ப்பணித்தார்

பல ஊர்களில் இருக்கும் கோயில்களுக்கு சென்று பல பாடல்கள் பாடினார்.அவைகள் எழுதப்படாத நிலையில் கடைசியாக சிதம்பரம் வந்தடைந்தார்.அங்கு அந்தணர் ரூபத்தில் அந்த சிவபெருமான் மாணிக்கவாசகரியிடம் தங்களுடைய பாடல்களை நான் எழுதி கொள்கிறேன் என்று கேட்டார்.மாணிக்கவாசகரும் அவருக்காக பாட அதனை அந்த அந்தணர் ஏட்டில் முழுவதுமாக எழுதி முடித்ததும் ஓலை சுவடியில் மாணிக்கவாசகர் சொற்படி அம்பலவாணன் இன்று கையப்பமிட்டு திருமுறையை கோவிலில் திருவாய்படியில் வைத்து சிவபெருமான் மறைந்து விட்டார்.

காலையில் திருக்காததை தெரிந்தவர்கள் ஏட்டினை கண்டு பேரின்பம் கொண்டார்கள் மாணிக்கவாசகர் சிவபெருமானை அழைத்து அந்த ஏட்டை காட்டி பொருள் விளக்கி அருள் வேண்டும் என்றதால் அவரும் திருவருளால் அம்மை அம்பலவாணரே இதனுடைய பொருள் இன்று கூறிய உடனே அருட்பேரொளி ஒன்று தோன்றியது.அந்த ஜோதியில் மாணிக்கவாசகர் சிவபெருமான் ரெண்டரை கலந்து இறைவனடி சேர்ந்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR