Homeதமிழ் கட்டுரைகள்மருதநாயகம் வரலாறு | Maruthanayagam Pillai History in Tamil

மருதநாயகம் வரலாறு | Maruthanayagam Pillai History in Tamil

மருதநாயகம் வரலாறு | Maruthanayagam Pillai History in Tamil

மருதநாயகம் பிள்ளை என்ற பெயர் திரை உலகிலும் இந்தியர்களின் விடுதலை வரலாற்றிலும் கலக்கி கொண்டிருக்கும் வீரத்தின் அடையாளமாக இருக்கிறது.மருதநாயகம் என்பவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.மருதநாயகம் பிள்ளை என்று அழைக்கப்படும் முஹம்மது யூசுப் கான் இவர் ஆற்காடு படைகளில் போர் வீரராகவும் ஆங்கிலேயர் கிழக்கிந்தியப் படை தலைவராகவும் இருந்தவர்.இவர் 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனை ஊரில் பிறந்தார்.மேலும் மருதநாயகம் பிள்ளை எப்படி இறந்தார் என்பதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

- Advertisement -

மருதநாயகம் ஆசிரியர் குறிப்பு

இயற்பெயர் முகமது யூசுப் கான்
பிறந்தஆண்டு 1725 ஆம் ஆண்டு
பிறந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில்
பெற்றோர் இளம் வயதிலேயே தனது பெற்றோர் இறந்துவிட்டனர்.
இறப்பு 15-10-1764 மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டார்.

 

மருதநாயகம் வரலாறு

மருதநாயகம் கான்சாகிப்

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் இந்த வேளாளர் இனத்தில் பிறந்தவர் தான் மருதநாயகம் பிள்ளை.இவர் தன்னுடைய இளம் வயதில் இஸ்லாமிய மார்க்கத்தை விரும்பி ஏற்று முகமது யூசுப்கான் என்று அழைக்கப்பட்டார்கள்.தன்னுடைய இளமை காலத்தில் பிரெஞ்சுக்காரர்களின் படையில் வேலை பார்க்கும் பொழுது தமிழ், பிரெஞ்சு, போர்ச்சுகீசியம், ஆங்கிலம், உருது போன்ற மொழிகளை கற்று தேர்ந்தவர்.

மருதநாயகம் வரலாறு

இவர் 1750 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நாடுபிடிக்கும்போது போர் நடந்தது அதில் முகமது யூஸ்கானின் திறமையை கண்டு வியந்த ராபர்ட் கிளைவ் அவரை தன்னுடைய படையில் இணைத்து ஐரோப்பிய முறையில் ராணுவ பயிற்சி கொடுத்தார்.பிறகு 1752 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆற்காடு முற்றுகையின்பொழுது முகமது யூசுப்கான் இன்னும் மருதநாயகம் சிறந்து விளங்கினார்.சிப்பாய் படைகளுக்கு தளபதியாகவும் பொறுப்பேற்றார்.பிறகு கான்சாகி என்னும் பட்டமும் பெற்றார்.

இவருடைய துணிச்சலான செயல்களால் 1755 ஆம் ஆண்டு பாளையக்காரர்களை அடக்கி கப்பம் வசூல் செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர்.கப்பம் சரியாக வசூல் செய்து கொடுத்ததனால் 159 ஆம் ஆண்டு மதுரை டு நெல்லையின் கவர்னராக பதவி ஏற்றார்.பிறகு 1758 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக சென்னை முற்றுகையிட்ட பிரஞ்சு படைகளை மருதநாயகம் கொரில்லா தாக்குதல் நடத்தி தோற்கடித்தார்.

- Advertisement -

இதனால் இவர் கமாண்டோகான் என்ற பதவி உயர்வு பெற்றார்.இதற்கு கவர்னர் பதவியில் நீடிக்க வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் ஆங்கிலேயர் அரசுக்கு கட்ட வேண்டிய இருந்தது அலுவல் காரணமாக மருதநாயகம் சென்னை சென்ற பொழுது சில கயவர்கள் மீனாட்சி அம்மன் கோவில் நிலங்களை சூரை ஆடினார்கள்.

இதனை அறிந்த மருதநாயகம் கயவர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இது மேலும் பல குளங்கள்,கோட்டைகள் ஆகியவற்றை பழுது நீக்கினார்கள்.இதனால் மருதநாயகனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்தது.இதனை தடுக்க என்னைய ஆங்கிலேய அரசு ஆற்காடு நவாப் பின் பணியாளர் தான் மருதநாயகம் என்று ஆணை பிறப்பித்தது இதனால் மற்றும் ஆங்கிலேயர்கள் மேல் மிகுந்த கோபம் கொண்டார் மருதநாயகம்.

- Advertisement -

இதனால் மருதநாயகம் மக்களிடம் பிரிட்டிஷ் அரசருக்கு எதிராக உணர்வை தூண்டுவதாக குற்றம் சாட்டி அவரை கைது செய்த உத்தரவிட்டது.இதனால் ஆங்கிலேயர்கள் மேல் நம்பிக்கையை இழந்த மருதநாயகம் தன்னை சுதந்திர ஆட்சியாளன் என்று பிரகடனப்படுத்தி சுமார் 27 ஆயிரம் வீரர்களை வைத்து படையை திரட்டினார்.

இது அந்த காலத்தில் திரட்டப்பட்ட மிகப்பெரிய படைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இதன் பிறகு 1763ஆம் ஆண்டு மதுரையில் ஆங்கிலேயர் படையே வென்று ஆங்கிலேயர் கொடியை இறக்கி தன்னுடைய மஞ்சள் நிற கொடியை அந்த கோட்டையில் ஏற்றினார் மருதநாயகம்.

மருதநாயகம் வரலாறு

இதனால் மருதநாயகத்தை வீழ்த்த சரியான சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்தது ஆங்கில அரசு.நவாப் அரசும் 1764 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மருதநாயகத்தின் கோட்டையை முற்றுகையிட்டது.பிறகு மருதநாயகம் பின்வாங்காமல் கோட்டையில் இருந்த வீரர்கள் அசராமல் போர் புரிந்தார்கள்.பிறகு தோல்வியிலிருந்து மீள தந்திரமாக யோசித்து ஆங்கில அரசு மருதநாயகத்தின் கோட்டைக்குச் செல்லும் உணவு குடிநீர் போன்றவற்றை நீட்டினார்கள்.இதனால் அவர்களுடைய படைகள் சோர்வடைந்து விட்டனர்.

இறுதியாக மருதநாயகம் 13-10-1764 நாளன்று தொழுகையில் இருந்த போது ஆங்கிலேயரிடம் பிடிபட்டார்.அக்டோபர் 16ஆம் தேதி அதிகாலை மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கில் ஏற்றப்பட்டார்.தூக்கிலிட்ட பிறகு பலர் மாயாஜாலங்கள் செய்து உயிர்த்தெழுந்து வந்துவிடும் என்று நம்பி ஆங்கிலேய அரசு அவருடைய உடலை பல பாகங்களாக வெட்டி பல்வேறு இடங்களில் புதைத்து விட்டனர்.

அவ்வாறு வெட்டப்பட்ட தலையை திருச்சியிலும்,கைகளை திருநெல்வேலி பாளையங்கோட்டைலும்,கால்களை தேனி மாவட்டம் பெரியகுளத்திலும்,உடலை மதுரை சம்மட்டிபுரத்தில் அடக்கம் செய்தார்கள்.இதில் இவரின் கால் பகுதி தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை தர்காவில் புதைக்கப்பட்டிருந்தது பலரும் இன்னமும் இந்த செய்தியை கேள்விப்பட்டதே இல்லை.இது உண்மையில் மிளிர் கல்லாக எஞ்சி இருக்கும்.இதுபோன்று பல இடங்களை நாமும் பாதுகாத்து பல தலைமுறைகளுக்கு பல வீரர்கள் உண்மை கதையை கூற வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR