Homeதமிழ் கட்டுரைகள்பனைமரம் வரலாறு | Palmyra History In Tamil

பனைமரம் வரலாறு | Palmyra History In Tamil

பனைமரம் வரலாறு | Palm History In Tamil

வணக்கம் நண்பர்களே.!!வெயில் காலம் வந்தால் நம் அனைவரும் நியாபகத்துக்கு வருவது பனைமரம் தான் ஏனென்றால்  பனை மரத்திலிருந்து நுங்கு நமக்கு கிடைக்கும் அது நம் உடலுக்கு குளிர்ச்சி தரும்.இது மட்டும் இல்லாமல் பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது.

- Advertisement -

பனை மரம் சிறப்பு

பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்கிறது. பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பொருட்களின் மூலம் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது.பல்வேறு வகையான தொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கும் பல விதங்களில் பனைமரம் உதவியாக இருக்கிறது.

பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் நுங்கு உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. பனை மரத்தின் இலைகளின் மூலம் சங்க காலத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஓலைச்சுவடியாக பயன்பட்டது.

மேலும் பனை ஓலைகள் மூலம் விசிறி கூடைகள் போன்றவற்றைகளை செய்து விற்பனைகள் செய்யலாம். பனை மரத்திலிருந்து குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டுப் பொருட்களை செய்வதற்கு பனைமரம் பயன்படுகிறது.

பனைமரம் வரலாறு

பனைமரம் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டதாக கூறப்படுகிறது பெரும்பாலும் மனிதர்கள் வாழும் பகுதியில் தான் பனைமரத்தை பார்க்க முடிகிறது. அடர்ந்த காடு பகுதிகளில் பனைமரத்தை பார்ப்பது மிகவும் எளிதான ஒன்றாகும். ஆசியா நாடுகளில் பனைமரம் அதிக அளவு காணப்படுகிறது.

- Advertisement -

இந்தியாவில் மட்டும் சுமார் 10.2 கோடி பனை மரங்கள் காணப்படுகிறது அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளது.பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்கிறது.

பனை மரம் பயன்கள்

பனை மரத்தின் மூலம் பல்வேறு வகையான பயன்கள் இருக்கிறது. பனை மரத்திலிருந்து பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஒரு உணவுப் பொருட்களின் முதன்மையானது பதநீர்.

- Advertisement -

பதநீரில் இருந்து கருப்பட்டி, வெல்லம், பனஞ்சினி,பனங்கற்கண்டு,பனம் மிட்டாய், பனம் கூழ் என பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் கிடைக்கிறது இது மட்டுமல்லாமல் பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பண ஓலைகளின் மூலம் விசிறி அலங்காரப் பொருட்கள் என பல வகையான பொருட்கள் செய்யப்படுகிறது.

பனை மரத்திலிருந்து நமக்கு நுங்கு கிடைக்கிறது.நுங்கு உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தருகிறது.பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் உணவுப் பொருட்கள் அனைத்திலும் அதிக அளவு மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது.

Read Also:

ஆவாரம் பூ பயன்கள் மற்றும் தீமைகள்

 

பனைமரம் வரலாறு | Palm History In Tamil

பனை மரம் வளர்ப்பு

பனைமரம் ஆண் பனைமரம்,பெண் பனை மரம் என இரு வகைப்படும். 15 ஆண்டுகள் வளர்ந்த பிறகு தான் பனைமரம் முதிர்ச்சி அடையும் என கூறப்படுகிறது.ஒவ்வொரு பனை மரமும் கிட்டத்தட்ட 30 மீட்டர் வரை உயரம் வளரும்.பனைமரத்தை வளர்ப்பதற்கு எந்த ஒரு பராமரிப்பும் தேவையில்லை தானாகவே வளர்ந்து விடும்.

பனை மரம் தரும் உணவுப் பொருட்கள் யாவை

பனை மரத்திலிருந்து நமக்கு பல வகையான உணவுப் பொருட்கள் கிடைக்கிறது முதன்மையாக நுங்கு, பதநீர், பனங்கள்ளு, பனங்கற்கண்டு, கருப்பட்டி வெல்லம்,பனம் மிட்டாய்,பனஞ்சினி,பனங்கிழங்கு என பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் கிடைக்கிறது.

பனை மரம் எத்தனை ஆண்டுகளில் பயன் தரும்

பனைமரம் விதைத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது ஆண் பனை மரமா பெண் பனை மரமா என்று நமக்கு தெரிய வரும்.அதன் பிறகு  5 ஆண்டுகள் கழித்து தான் பனை மரத்தில் நுங்கு வைக்கும்.

னைமரம் கிட்டத்தட்ட 30 மீட்டர் வரை உயரம் வளரக்கூடியது இந்த மரத்திற்கு எந்த ஒரு பராமரிப்பும் தேவையில்லை தானாகவே மரம் வளர்ந்து விடும்.பனை மரத்தின் விதையை மட்டும் நட்டு வைத்தால் போதும் அது 15 ஆண்டுகள் கழித்து மரமாகிவிடும்.

இதையும் படிக்கலாம்

தினையின் பயன்கள்
துவரம் பருப்பு பயன்கள்
துளசி பயன்கள் மற்றும் தீமைகள்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR