Homeதமிழ் கட்டுரைகள்ராஜ ராஜ சோழன் வரலாறு பற்றிய முழு விவரம் | Raja Raja Cholan History...

ராஜ ராஜ சோழன் வரலாறு பற்றிய முழு விவரம் | Raja Raja Cholan History in Tamil

ராஜ ராஜ சோழன் வரலாறு பற்றிய முழு விவரம் | Raja Raja Cholan History in Tamil

ராஜ ராஜ சோழன்

உத்தமசோழன் இறந்த பிறகு அவருடைய மகன் மதுராந்தகன் மன்னர் ஆகவில்லை அதற்கு பதிலாக இரண்டாம் மறந்தனுக்கும் சேரநாட்டு இளவரசி வானவன் மாதேவிக்கும் பிறந்த ராஜராஜ சோழன் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

- Advertisement -

தந்தையிடமிருந்து ஆட்சியில் பங்கேற்று அறிவு தெளிவும் அரசாங்க விவேகமும் நிர்வாக திறமையும் போர் அனுபவம் பெற்றிருந்த ராஜராஜ சோழன் என்கின்ற இராசராசன் புதிய சகாத்மம் படைத்தார் இவருடைய ஆட்சி காலத்தில் சோழர் வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

சோழ பேரரசு புதிய பரிமாணங்களுடன் பிரகாசித்து ராஜராஜ சோழர்களின் இரண்டாவது பேரரசை உருவாக்கினார் நாகராசன் வழி வந்தவர்கள் பிற்கால சோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

பிற்கால சோழர் வரலாற்றிற்கு அடிதளம் இட்ட விஜயாலய சோழர் முத்திரையர்களிடமிருந்து தஞ்சாவூரை கைப்பற்றி தஞ்சாவூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தார்.

இவர் பல போர்களில் வெற்றி பெற்று சோழர்களின் ஆட்சிக்கு நிலைத்தன்மையை கொடுத்தார் பிறகு ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் சோழ நாட்டு அரசியல் தெளிவற்ற நிலை நீடித்தாலும் இவர் ஆட்சிக்கு வந்த பிறகு சோழர் மரபும் நிர்வாகமும் ராணுவமும் நிலைபெற்று இருந்தது.

- Advertisement -
raja raja cholan history in tamil
raja raja cholan history in tamil

அரசாங்க அமைப்பு தரைப்படையும் கடற்படை விரிவாக்கத்துக்காக உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.இந்த கட்டமைப்பை கொண்டு வலிமைமிக்க பேரரசை உருவாக்கிய பெருமை இராஜராஜ சோழனை சேரும் இவர் பல போர்களில் புரிந்து சோழப்பேரரசரின் விரிவு படுத்தினார்கள்.ராஜராஜன் சோழனின் போர் வெற்றிகள் மிகவும் புகழ்பெற்று விளங்கின.

ராஜராஜ சோழனின் பொற்காலம்

ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழிவர்மன் இவர் கிபி 957 முதல் 973 வரை சோழ தேசத்தை ஆண்ட சுந்தர சோழ சக்கரவர்த்தி வானமாதேவி ஆகியோர் இவருடைய பெற்றோர்கள் ஆவார்கள்.தன்னுடைய பெற்றோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் அருள்மொழிவர்மன்.இவருடைய அண்ணன் ஆதித்த கரிகாலன் இவர் சுந்தர சோழருக்கு பிறகு அரியணை ஏறுகிற நிலையில் இருந்தது.

- Advertisement -

ஆனால் அவர் ஒரு சதியின் மூலமாக கொல்லப்பட்டதனால் ராஜராஜனுக்கு அரியணை ஏறும் உரிமை வழங்கப்பட்டது. நாட்டு மக்களின் ஆசியும் அதுவாகவே இருந்தது.ஆனால் ராஜராஜ சோழன் அதை விரும்பவில்லை.

தன்னுடைய சித்தப்பா உத்தமசோழன் இருக்கும் பொழுது தான் அறியனை ஏறுவது முறையில்லை என்று உத்தமசோழருக்கு தன்னோடைய அரியணை விட்டு க் கொடுத்தார் இவருடைய இந்த பெருந்தன்மையான செயல் மக்கள் இவன் மேல் வைத்திருந்த அன்பு இன்னும் அதிகம் ஏற்பட்டது உத்தமசோழன் பிறந்த பிறகு ராஜராஜ சோழன் அரியணை ஏறினார்.

அதுவரைக்கும் சோழ சாம்ராஜ்யத்தில் எந்த ஒரு மன்னனும் செய்யாத சாதனைகளை ராஜராஜ சோழன் செய்தார் ஆனால் ராஜராஜன் சோழன் காலத்தை சோழர்களிடையே பொற்காலம் என்று சொல்வார்கள் சோழர்களுக்கு மட்டுமில்லை தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலம் ராஜ ராஜ சோழனின் காலம்தான் என்று கூறி வருகிறார்கள்.

ராஜ ராஜ சோழனின் மனைவிகள் மற்றும் மகன்,மகள்கள் பெயர்

ராஜ ராஜ சோழனுக்கு உலகமாதேவியார்,சோழமாதேவியார்,இலாட மாதேவியார்,அபிமானவல்லி,திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி,பிருத்வி மகாதேவி,மீனவன் மாதேவியார்,நக்கன் தில்லை அழகியார்,காடன் தொங்கியார்,கூத்தன் வீராணியார்,இளங்கோன் பிச்சியார் என மனைவியர் பலர் இருந்தார்கள்.இவர்க்கு ராஜேந்திரன் என்னும் மகனும் குந்தவை,மாதேவடிகள் என்னும் இரண்டு பெண் மகளும் இருந்தார்கள்.

ராஜ ராஜ சோழன் வரலாறு

ராஜ ராஜ சோழன் போரில் குவித்த வெற்றிகள்

ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்யும் பொழுது சேரனின் கேரளா நாட்டோடு பெரும் போர் நடந்தது.இது தான் இவர் ஆட்சி பொறுப்பேற்று நடத்திய முதல் போர்.இந்தப் போரில் சோழர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது ராஜ ராஜ சோழன் போர்க்களத்தில் நின்று வாழ்வு சுழற்றி போரில் வெற்றி கிடைக்காமல் என்ன செய்யும் இந்த வெற்றிக்கு பின் காந்தளூர் சாலை கலமறுத்த ராஜராஜ சோழன் என்ற பட்டம் கிடைத்தது.

பிறகு உதகை கோட்டைக்குச் சென்று ராஜ ராஜனின் தூதுவளை அந்த நாட்டினர் அவமதித்தின் சிறையில் அடைத்தார்கள்.பெரும் கோபம் அடைந்த ராஜ ராஜ சோழன் பெரும் படை திரட்டி கொண்டு 12 மணி நேரத்தில் 18 காடுகளை கடந்து சென்று உதயகிரி கோட்டையை தீயிட்டு எரித்தார் பிறகு மிகப்பெரிய மதில்களை கொண்ட உதயகிரி கோட்டைக்குள் சூரியனைப் போல் கம்பீரமாக நுழைந்து பகைவர்களை சுட்டெரித்த கோட்டையை அடையாளமே இன்றி தரைமட்டமாக்கி அளித்தார்.அதன் மீது வெற்றி கொடியை நாட்டி விட்டேன் தன் நாட்டு தூதுவனை விடுவித்தார் ராஜ ராஜ சோழன்.

மேலும் இந்த போரினை ஒட்டகத்த தன்னுடைய பாடல் வழியாக அழகாக பாடியிருக்கின்றாய் இது போல் கலிங்கத்து பரணையிலும் உதயகிரி போர் வெற்றி கொடுத்து பாடலை ஜெயம் கொண்டார் மிகவும் அழகான வரிகளில் எழுதி இருப்பார்.

கடல் கடந்து போர் செய்த ராஜ ராஜ சோழன்

ராஜ ராஜ சோழனுக்கு கடல் கடந்து போய் போர் செய்ய ரொம்ப நாளாக ஆசை இருந்தது.அதனால் இலங்கை நாட்டின் மீது போர் தொடுத்து சென்றார் ஈழநாட்டில் கொடுமையான ஆட்சி செய்த சிங்கள மன்னனை அடக்கி சோழர்களின் நிலையான அரசை அமைத்தார்.அந்த நேரத்துல இலங்கையோட மன்னனாக இருந்தவன் ஐந்தாம் மகேந்திரன் படைகள் ராஜ ராஜ சோழனின் படைகளை எதிர்த்து நிற்க முடியாமல் சிதறி ஓடினார்கள்.

இதுக்கு மேல் இங்கு இருந்த இராஜராஜன் சோழனின் கையால் சாகிறது தான் வழின்னு தெரிஞ்சு ஐந்தாம் மைந்தன் எங்கேயோ ஓடி சென்றார்கள்.ஈழ அதன் பிறகு நாடு முழுவதையும் கைப்பற்றினார் ராஜ ராஜ சோழன் இதன் மூலம் கடல் கடந்து வெற்றி கண்ட ராஜ ராஜ சோழன் இன்று எட்டு திசைகளிலும் அவருடைய புகழ் ஒலித்தது.

ஈழநாட்டு போருக்கு பிறகு இலங்கையில் ஒரு நிலையான ஆட்சியை ஏற்படுத்தினார் ராஜ ராஜ சோழன் இதற்கு முன் இலங்கையை கைப்பற்றிய மன்னர்கள் எல்லோரும் சில பகுதிகளை மட்டுமே வைத்து ஆட்சி செய்து வந்தார்கள்.ஆனால் ராஜ ராஜ சோழன் இலங்கை தேசம் முழுவதுமே கைப்பற்றி அங்கு ஒரு தலை நகரத்தை அனுராதபுரத்தில் இருந்து பொலன்னறுவை என்ற இடத்திற்கு மாற்றினார்கள்.

ராஜ ராஜ சோழனின் சிறப்புகள்

ராஜ ராஜ சோழனுக்கும் மற்ற மன்னர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் போர் நடந்தாலும் புதிய நாட்டை கைப்பற்றினாலும் அந்த மக்களுக்கு எந்த வித கஷ்டத்தையும் கொடுக்க மாட்டார்.

போர் ஒரு பக்கம் நடந்தாலும் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு ஏற்பாடு பண்ணியிருப்பார் இந்த ஒரு நல்ல குணம் ராஜ ராஜ சோழன் இடம் இருப்பதால் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வந்தார் எதிரி நாட்டு மக்கள் கூட இவர்தான் தங்கள் நாட்டை ஆள வேண்டும் என்று எண்ணத்தை உருவாக்கினார் இலங்கை நாட்டை வெற்றி கொண்டதை கொண்டாடுகின்ற வகையில் ஒரு பெரிய சிவன் கோயிலை அங்கு கட்டினார்.

அதன் பின் கங்கர்களோடு கங்கபாடி நாடு நூல்பர்கலோடு நூளம்பாடி நாடு ஆகிய சோழ நாட்டு மக்களோடு இணைக்கப்பட்டது பிறகு மைசூரையும் கைப்பற்றினார் ராஜ ராஜ சோழன் பின் கொங்கு நாட்டில் இருந்து காவேரியை தாண்டி தடிகை பாடிய இன்னும் நாட்டை தாக்கி மிகப்பெரும் வெற்றியை கண்டார் அவர் கைப்பற்றிய கங்கை நாடுகளில் அடுத்து நூற்றாண்டு காலத்திற்கு சோழர்களின் ஆதிக்கம் இருந்தது அதுதான் ராஜ ராஜ சோழன் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்கு அடையாளம்.

வட திசை நாடுகளிலும் ராஜராஜனின் வெற்றி கொடிகள் பறந்தது ராஜராஜனின் வாழும் தேனும் பட்ட இடமெல்லாம் வெற்றி கண்டது அவர் அடைய நினைத்த நாடுகளில் எல்லாம் சோழர் கொடி கட்டி பறந்தார்கள்.

ராஜ ராஜ சோழனின் ஆட்சியின்போது ஓவியம் சிற்பம் நாடகம் நடனம் இசை இலக்கியம் போன்றவை நன்றாக வளர்ச்சி அடைந்து வந்தது.இதனைப்போல் இவருடைய ஆட்சி காலத்தின் போது தேவராட்டின் திருமுறைகளும் நாடு முழுவதும் வளர்ச்சியை அடைய தொடங்கியது.

சோழ பேரரசுகளை அதிகமாக உருவாக்குவதற்காக பெரும்படையை திரட்டிய ராஜ ராஜ சோழன்.இவர் திரட்டிய படைகள் அனைத்தும் இவர் நினைத்தது போல இவருக்கு பல சிறப்புகளையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது.

ராஜராஜ சோழனின் வேறு பெயர்கள்

ராஜ ராஜன்,காந்தலூர் கொண்டான்,அழகிய சோழன்,மும்முடிச்சோழன்,ராஜ சர்வக்ஞன்,சோழநாராயணன்,அபயகுலசேகரன்,அரித்துர்க்கலங்கன்,அருள் மொழி,ரணமுகபீமன்,ரவிவம்சசிகாமணி,ராஜபாண்டியன்,ராஜகேசரிவர்மன்,சோழேந்திரசிம்மன்,ராஜமார்த்தாண்டன்,ராஜேந்திரசிம்மன்,ராஜவிநோதன்,உத்தமசோழன்,உத்துகதுங்கன்,உய்யக்கொண்டான்,உலகளந்தான்,கேரளாந்தகன்,சண்ட பராக்கிரமன்,சத்ருபுஜங்கன்,சிங்கனாந்தகன்,சிவபாத சேகரன்,சோழகுல சுந்தரன்,சோழ மார்த்தாண்டன்,திருமுறை கண்ட சோழன்,ஜன நாதன்,ஜெயகொண்ட சோழன்,தெலிங்க குலகாலன்,நித்ய விநோதன்,பண்டித சோழன்,பாண்டிய குலாசனி,பெரிய பெருமாள்,மூர்த்தி விக்கிரமா பரணன்,சத்திரிய சிகாமணி,கீர்த்தி பராக்கிரமன் என பல விருதுப் பெயர்களை பெற்றிருந்தார்.

ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்

ராஜராஜ சோழன் மிகவும் தீவிரமான சிவன் பக்தர் ஆவார் அதனால் தஞ்சையில் வரலாறு நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக தஞ்சை பெரிய கோவிலை கட்டி வைத்தார்.இந்தக் கோவில் ஆனது தமிழர் கட்டிடக்கலையின் உயர்வுக்கு சான்றாக இருக்கிறது என்றும் கருதப்படுகின்றது.இந்தக் கோவில் தமிழகத்தில் பெரும் சுற்றுலாத்தலமாக அமைந்திருக்கிறது.

1005 ஆண்டி எழுதப்பட்ட கோவில் 1010 ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்த கோவில் முன்புறம் மிகவும் பெரியதான சிவலிங்கமும் இருக்கின்றது இது உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கத்தை கொண்ட கோவில் என்றும் பெருமையுடன் அழைக்கப்படுகின்றது.

கோவிலின் கட்டிட அமைப்புகள் முழுவதும் தமிழ் மொழியை முக்கியத்துவமாக கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.அதாவது மெய் எழுத்துக்கள் 18 என்பதனால் 18 அடி உயரத்தில் சிவலிங்கமும் உயிர் எழுத்து 12 என்பதால் லிங்கம் 12 அடி உயரத்திலும் உயிர் மெய் எழுத்துக்கள் 216 என்பதனால் கோபுரத்தின் உயரம் 216 அடி உயரத்திலும் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது.இதனால் இந்த கோவிலின் சிறப்புகள் மிகவும் பெரிதாக கருதப்படுகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR