Homeதமிழ் கட்டுரைகள்ரஜினி வாழ்க்கை வரலாறு | Rajinikanth History In Tamil

ரஜினி வாழ்க்கை வரலாறு | Rajinikanth History In Tamil

ரஜினி வாழ்க்கை வரலாறு|Rajinikanth History In Tamil

வணக்கம் நண்பர்களே.!!ரஜினிகாந்த் என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது தமிழகத்தில் இந்தியாவில் ஏன் உலகம் முழுவதும் கூட ரஜினிகாந்த் என்றால் அனைவருக்கும் தெரியும் அந்த அளவுக்கு இவர் படங்கள் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது குறிப்பாக சொல்லப்போனால் ரஜினிகாந்துக்கு இந்தியாவை தாண்டி ஜப்பானில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

Rajinikanth Birthday In Tamil

டிசம்பர் 12 1950 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் வருட வருடம் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படம் 

ரஜினிகாந்த் ஆரம்பத்தில் பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தின் நடத்துனராக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நாடகத் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி தமிழ்,ஹிந்தி,தெலுங்கு,கன்னடம்,பெங்காலி மற்றும் மலையாள மொழிகளில் 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்தர்.ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் ஆகும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

ரஜினிகாந்த் இந்தியா திரைப்பட நடிகர்.2007 ஆம் ஆண்டு சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்கு 26 கோடி சம்பளம் வாங்கினார் ஆசிய அளவில் நடிகர் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிகம் சம்பளம் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவார்.

- Advertisement -

6 முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளை பெற்றார். ரஜினிகாந்த் நடிகராக மட்டும் நடிக்காமல் சில திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும்,திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.ரஜினிகாந்தின் ரசிகர்கள் தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.

ரஜினி வாழ்க்கை வரலாறு
ரஜினி வாழ்க்கை வரலாறு

ரஜினி வாழ்க்கை வரலாறு 

ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு இந்தியாவில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும்,ரமாபாய்க்கும் நான்காவது மகனாக பிறந்தார்.ரஜினிகாந்த் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர். ரஜினிகாந்தின் தந்தை  காவலராக பணி புரிந்தார். ரஜினிகாந்துக்கு 9 வயது இருக்கும் பொழுது ரஜினிகாந்தின் தாயார் ரமாபாய் இறந்தார்.

- Advertisement -

ரஜினிகாந்த் பெங்களூரில் உள்ள ஆசாரியா பாடசாலை மற்றும் விவேகானந்தா பாலக சங்கம் ஆகியவற்றில் தனது படிப்பை முடித்தார் படிப்பு முடித்த பிறகு சிவாசி அலுவலகத்தில் உதவியாளராகவும் தச்சாளராகவும் வேலை பார்த்தார்.அது மட்டும் இல்லாமல் ஒரு இடத்தில் மூட்டை தூக்கும் வேலையும் பார்த்தார்.

அதன் பிறகு பெங்களூர் போக்குவரத்து சேவை தேர்வு எழுதி நடத்துனர் உரிமம் பெற்று 1970 ஆம் ஆண்டு பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றினார்.

போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நாடகத் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.இயக்குனர் கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.அதன்பின் பல திரைப்படங்களை நடித்திருந்தார்.

ரஜினி புதிய படம்

நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,மீனா,குஷ்பூ,சூரி,பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்கள் இணைந்து நடித்திருந்தனர்.இந்தத் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று இது ஒரு ஆவரேஜ் படமாக நடிகர் ரஜினிகாந்துக்கு அமைந்தது.

அண்ணாத்த திரைப்படத்தின் தோல்வியை சரிகட்ட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக இருக்கிறது.

Read Also:

பாரதியார் பற்றிய முழு விவரம்

ரஜினி படங்கள் லிஸ்ட் 

நடிகர் ரஜினிகாந்த் தனது முதல் படம் அபூர்வ ராகங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது வரை தமிழில் மட்டும் 110 படங்கள் நடித்துள்ளார்.ஒட்டு மொத்தமாக 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரஜினி வாழ்க்கை வரலாறு

ரஜினி வாழ்க்கை வரலாறு

வ எண் Movie – படம் ஆண்டு
1 அபூர்வ ராகங்கள் 1975
2 மூன்று முடிச்சு 1976
3 அவர்கள் 1977
4 கவிக்குயில் 1977
5 ரகுபதி ராகவ ராஜாராம் 1977
6 புவனா ஒரு கேள்விக்குறி 1977
7 16 வயதினிலே 1977
8 ஆடு புலி ஆட்டம் 1977
9 காயத்ரி 1977
10 ஆறு புஷ்பங்கள் 1977
11 சங்கர் சலீம் சைமன் 1978
12 ஆயிரம் ஜென்மங்கள் 1978
13 மாங்குடி மைனர் 1978
14 பைரவி 1978
15 இளமை ஊஞ்சலாடுகிறது 1978
16 சதுரங்கம் 1978
17 வணக்கத்திற்குரிய காதலியே 1978
18 முள்ளும் மலரும் 1978
19 இறைவன் கொடுத்த வரம் 1978
20 தப்புத்தாளங்கள் 1978
21 அவள் அப்படித்தான் 1978
22 தாய் மீது சத்தியம் 1978
23 என் கேள்விக்கென்ன பதில் 1978
24 ஜஸ்டிஸ் கோபிநாத் 1978
25 பிரியா 1978
26 குப்பத்து ராஜா 1979
27 நினைத்தாலே இனிக்கும் 1979
28 அலாவுதீனும் அற்புத விளக்கும் 1979
29 தர்மயுத்தம் 1979
30 நான் வாழவைப்பேன் 1979
31 ஆறிலிருந்து அறுபது வரை 1979
32 அன்னை ஓர் ஆலயம் 1979
33 பில்லா 1980
34 அன்புக்கு நான் அடிமை 1980
35 காளி 1980
36 நான் போட்ட சவால் 1980
37 ஜானி 1980
38 எல்லாம் உன் கைராசி 1980
39 பொல்லாதவன் 1980
40 முரட்டுக் காளை 1980
41 தீ 1981
42 கழுகு 1981
43 தில்லு முல்லு 1981
44 கர்ஜனை 1981
45 நெற்றிக்கண் 1981
46 ராணுவ வீரன் 1981
47 போக்கிரி ராஜா 1982
48 தனிக்காட்டு ராஜா 1982
49 ரங்கா 1982
50 புதுக்கவிதை 1982
51 எங்கேயோ கேட்ட குரல் 1982
52 மூன்று முகம் 1982
53 பாயும் புலி 1983
54 துடிக்கும் கரங்கள் 1983
55 தாய் வீடு 1983
56 சிவப்பு சூரியன் 1983
57 அடுத்த வாரிசு 1983
58 தங்கமகன் 1983
59 நான் மகான் அல்ல 1984
60 தம்பிக்கு எந்த ஊரு 1984
61 கை கொடுக்கும் கை 1984
62 அன்புள்ள ரஜினிகாந்த் 1984
63 நல்லவனுக்கு நல்லவன் 1984
64 நான் சிவப்பு மனிதன் 1985
65 உன் கண்ணில் நீர் வழிந்தால் 1985
66 ஸ்ரீ ராகவேந்திரா 1985
67 படிக்காதவன் 1985
68 மிஸ்டர் பாரத் 1986
69 நான் அடிமை இல்லை 1986
70 விடுதலை 1986
71 மாவீரன் 1986
72 வேலைக்காரன் 1987
73 ஊர் காவலன் 1987
74 மனிதன் 1987
75 குரு சிஷ்யன் 1988
76 தர்மத்தின் தலைவன் 1988
77 கொடி பறக்குது 1988
78 ராஜாதி ராஜா 1989
79 சிவா 1989
80 ராஜா சின்ன ரோஜா 1989
81 மாப்பிள்ளை 1989
82 பணக்காரன் 1989
83 அதிசய பிறவி 1990
84 தர்மதுரை 1991
85 நாட்டுக்கு ஒரு நல்லவன் 1991
86 தளபதி 1991
87 மன்னன் 1992
88 அண்ணாமலை 1992
89 பாண்டியன் 1992
90 எஜமான் 1993
91 உழைப்பாளி 1993
92 வள்ளி 1993
93 வீரா 1994
94 பாட்ஷா 1995
95 முத்து 1995
96 அருணாச்சலம் 1997
97 படையப்பா 1999
98 பாபா 2002
99 சந்திரமுகி 2005
100 சிவாஜி 2007
101 குசேலன் 2008
102 எந்திரன் 2010
103 கோச்சடையான் 2014
104 லிங்கா 2014
105 கபாலி 2016
106 காலா 2018
107 2.0 2018
108 பேட்ட 2019
109 தர்பார் 2020
110 அண்ணாத்த 2021
111 ஜெயிலர் படப்பிடிப்பில்

 

Read Also:

ராமானுஜர் வரலாறு தமிழில்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு
வள்ளலார் வரலாறு

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR