Homeதமிழ் கட்டுரைகள்குடியரசு தினம் பேச்சு போட்டி | Republic Day Speech in Tamil

குடியரசு தினம் பேச்சு போட்டி | Republic Day Speech in Tamil

குடியரசு தினம் பேச்சு போட்டி | Republic Day Speech in Tamil

வணக்கம் நண்பர்களே.!! இந்தியாவின் குடியரசு தினம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம். இந்தியா சுதந்திரம் கிடைத்த பின்பு எப்பொழுது குடியரசு நாடாக மாறியது, இந்தியாவின் குடியரசு தினம் வருடம்,இந்தியாவின் குடியரசு தினத்தின் போது கொண்டாடப்படும் நிகழ்ச்சிகள்,இந்தியாவின் குடியரசு தினம் தேதி மற்றும் குடியரசு தினத்தைப் பற்றிய வரலாறு போன்றவற்றை கட்டுரை வடிவில் இந்த பதிவில் முழு விவரங்களை பார்ப்போம்.

- Advertisement -

குடியரசு தினம் பற்றிய கட்டுரை

  • இந்திய குடியரசு தினம் ஆண்டு
  • குடியரசு தினம் தேதி
  • குடியரசு தினம் என்றால் என்ன
  • குடியரசு தினம் 
  • குடியரசு தினம் வரலாறு
  • இந்தியக் குடியரசு தினம்
  • குடியரசு தினம் உரை
  • குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி
  • முதல் குடியரசு தினம்
  • குடியரசு தினம் கொடி ஏற்றும் முறை

இந்திய குடியரசு தினம் ஆண்டு

இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவை ஏற்படுத்தி அரசியல் நிர்ணய சபை தீர்மானம் ஏற்றியது. அம்பேத்கர் அரசியல் சட்ட வரைவு குழுவின் தலைவர் ஆனார். அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட அரசியல் அமைப்புக்கு பல்வேறு விவாதங்கள் திருத்தங்களுக்கு பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இறுதி வடிவம் பெற்றது.1950 ஆம் ஆண்டு இந்தியர்கள்,இந்தியர்களுக்காக உருவாக்கிக் கொண்ட அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வந்தது.

குடியரசு தினம் தேதி

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக 1949 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழுவை ஏற்படுத்தி அரசியல் அரசியல் நிர்ணயம்  ஏற்றியது அதன்படி அரசியல் சட்ட வரைவு குழுவின் தலைவராக அம்பேத்கர் பதவி ஏற்றார் அம்பேத்கர் தலைமையில் ஓராண்டு காலத்தில் பல்வேறு விவாதங்கள் திருத்தங்கள் செய்த பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இறுதி வடிவம் பெற்றது.

பிரிட்டிஷ் சட்டத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற்று தண்டாச்சியை நோக்கம் என்று 1929 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பின் நினைவாக இந்தியா அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் நாள் ஜனவரி 26 என்று முடிவு செய்யப்பட்டது.ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

குடியரசு தினம் என்றால் என்ன

குடியரசு தினம் என்றால் ஒவ்வொரு நாடும் தன் நாட்டுக்காக அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் நாள் தான் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.இந்தியாவிற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைத்த பிறகு இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26ஆம் தேதி கொண்டு வரப்பட்டது ஜனவரி 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

குடியரசு தினம் பற்றிய கட்டுரை

குடியரசு தினம் Republic Day

இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் பெற்றது சுதந்திரத்திற்கு பிறகு ஜனவரி 26 1950 ஆம் ஆண்டு இந்தியாவை குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை கொண்டாடும் விதமாக கடற்படை, விமானப்படை, ராணுவ படை ஆகிய முப்படைகளுக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் தலைமை தாங்குவார்.

- Advertisement -

இந்தியா ஒரு சுதந்திர நாடு இந்தியாவில் பல மொழிகள் உள்ளது ஒவ்வொரு மொழிகள் மற்றும் மாநிலங்களுக்கு ஒவ்வொரு கலைகள் உள்ளது அந்த அனைத்து கலைகளும் குடியரசு தினத்தன்று புதுடெல்லியில் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலைமையில் ஒவ்வொரு நாட்டின் தலைவர்கள் அழைத்து வரப்படும் குடியரசு தினத்தன்று வரும் வெளிநாட்டு தலைவர்களை பக்கத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் கவனித்துக் கொள்வார்கள்.

குடியரசு தினம் வரலாறு

இந்தியா வெள்ளையர்களின் ஆட்சியின் கீழ் செயல்பட்டு வந்து கொண்டிருந்த பொழுது இந்திய மக்களுக்காக பல சட்டம் நெறிமுறைகள் வேண்டும் என 1934 ஆம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது.இதன் மூலம் தான் இந்தியா சுதந்திர போராட்டத்திற்கு வழிவகுத்தது 1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் அரசியல் நிர்ணய சபை உருவாக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.நேரு,அம்பேத்கர், வல்லபாய்படேல், ராஜாஜி உள்ளிட்டவர் இடம் பெற்ற அரசியல் நிர்ணய சபை உருவானது.

அரசியல் நிர்ணய சபையின் தலைவராக 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி ராஜேந்திர பிரசாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆகஸ்ட் 15,1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது சுதந்திரத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 29 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவை ஏற்படுத்தி அரசியல் நிர்ணய சபை தீர்மானம் ஏற்றியது.நிர்ணய சபை தீர்மானத்தின்படி சட்டமேதை அம்பேத்கார் அரசியல் சட்ட வரைவு குழுவின் தலைவர் ஆனார்.

அம்பேத்கர் தலைமையில் கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக செயல்பட்டனர்.அரசியலமைப்பு ஏற்ற இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் தரப்பட்ட நிலையில் ஓராண்டுக்குள்ளாகவே அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட அரசியல் அமைப்புக்கு பல்வேறு விவாதங்கள் திருத்தங்களுக்கு பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் இறுதி வடிவம் பெற்றது.

22 பிரிவுகளையும்,12 அட்டவணைகளையும் கொண்ட உலகிலே மிகப்பெரிய அரசியல் அமைப்பு என பெயர் பெற்ற இந்திய அரசியலமைப்பு மக்களாட்சியையும், கூட்டாட்சியையும் அடிப்படையாகக் கொண்டது.அரசு நிறுவனங்களின் அமைப்பு, மக்களின் உரிமைகள், கடமைகளை உள்ளடக்கியது.அரசு நிறுவனங்களின் அமைப்பு,மக்களின் உரிமைகள், கடமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

பிரிட்டிஷ் சட்டதிட்டத்திலிருந்து விடுதலை பெற்று முழுமையான தாண்டாச்சியை நோக்கம் என்று 1929 ஆம் ஆண்டு ஜனவரி 26 நாள் இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பின் நினைவாக இந்திய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் நாள் ஜனவரி 26 என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியர்கள், இந்தியர்களுக்காக உருவாக்கிக் கொண்ட அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.

இந்தியக் குடியரசு தினம்

இந்தியாவில் குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் புதுடெல்லியில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.குடியரசுத் தலைவரின் தலைமையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது இந்த விழாவின்போது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டின் தலைவரை சிறப்பு விருந்தினராக இந்திய அரசாங்கத்தால் முறைப்படி அழைப்பது வழக்கமாகும்.இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் பல்வேறு வகையான அணி வகுப்புகள் மிகவும் கோலாகலமாக நடத்தப்படும்.இந்த விழாவில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று அவருக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொள்வார்கள்.

குடியரசு தினம் உரை

இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாக மன்னராட்சி முறையில் பல்வேறு நாடுகளை கைப்பற்றுவது அந்த நாடுகளை அடிமைப்படுத்துவது என இருந்தது அதை போல் தான் இந்தியாவையும் பிரிட்டிஷ் அரசாங்கம் கைப்பற்றி அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக இருந்தது அதன் பின் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இந்தியாவை குடியரசு நாடாக வழிமுறை செய்தனர்.பல சட்ட திட்டங்களை கொண்டு மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நிறுவப்பட்டது.குடியரசு என்றால் மக்களாட்சியாகும்.

குடியரசு தினம் பற்றிய கட்டுரை

மக்களுக்கு சேவை செய்வதற்காக குடியரசுத் தலைவர் என்பவரை மக்கள் நேரடியாகவோ அல்லது மக்கள் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள்.குடியரசுத் தலைவரின் கீழ் பல அமைச்சர்கள் மற்றும் இந்தியாவை பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு முதலமைச்சரும் முதலமைச்சரின் கீழ் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர் மக்களின் மக்களின் கோரிக்கை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி | Republic Day Speech in Tamil

இந்தியா வெள்ளையர்களின் கோரப்பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்பதற்காக பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அகிம்சை முறையில் ரத்தம் சிந்தி,ஆயுதம் ஏந்தி போராட்டத்தை நடத்தினர் பலரும் உயிர் தியாகங்களும் செய்தனர்.

பல போராட்டங்களுக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை வல்லரசு நாடாக கொண்டு வருவதற்கு இந்தியாவை ஒரு குடியரசு நாடாக 1950 ஜனவரி 26 ஆம் தேதி நிறுவப்பட்டது.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு போராட்டம் செய்தவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் ராஜபாதை சாலையில் இந்தியா முப்படைகள் உள்ளிட்ட பல வகையான அணிவகுப்பு நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் குடியரசு தின விழாவின்போது ராணுவப்படை,கடற்படை,விமானப்படை ஆகிய முப்படை தலைமை தளபதியாக இந்தியாவின் குடியரசுத் தலைவர் விளங்குவார். இந்தியாவின் குடியரசு தின விழாவை இந்தியாவின் குடியரசுத் தலைவர் தலைமை தாங்குவார்.

முதல் குடியரசு தினம்

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பு இந்தியாவை உலகின் மிகச்சிறந்த நாடாக மாற்றுவதற்கு 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவை ஏற்படுத்தி அரசியல் நிர்ணய சபை தீர்மானம் ஏற்றியது.அரசியல் நிர்ணய சபை தீர்மானத்திற்கு அம்பேத்கர் தலைவரானார்.

அம்பேத்கர் தலைமையில் ஓராண்டு காலத்தில் பல்வேறு விவாதங்கள் திருத்தங்கள் செய்யப்பட்டு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இறுதி வடிவம் பெற்றது.பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து இந்தியா முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்று 1929 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பின் நினைவாக ஜனவரி 26 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.

குடியரசு தினம் பாடல் வரிகள்

தினம் தினம்

இன்று குடியரசு தினம்;

சுகம் சுகம்

அதை உணர்ந்திடும் மனம்;

ஆதிக்கம் படைத்த முடியாட்சி – அது

முடிந்துபோன கதையாச்சு;

அடிமை விலங்கை உடைச்சாச்சு – இது

ஆனந்தமான மக்களாட்சி;

உரிமை என்பது நம் உடைமை

உண்மை பேசுவதே வலிமை;

வாழ்வில் தேவை என்றும் எளிமை

எதிலும் கொள்ளாது இருப்போம் பெறாமை;

சுதந்திரம் கண்டது நம் பொறுமை – என்றும்

சுகத்தினை அளித்திடுவது ஒருமை;

நல் தலைவர் அமைவது பெருமை – அதற்கு

அனைவரும் வாக்கிடுவது நம் கடமை;

ஜெய்ஹிந்த்…!

தினம் தினம்

இன்று குடியரசு தினம்

சுகம் சுகம்

அதை உணர்ந்திடும் மனம்…!!

குடியரசு தினம் கொடி ஏற்றும் முறை

இந்தியாவின் மூவ வண்ணக் கொடிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் அன்று மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு ஏற்றப்படும் கொடிஇந்தியாவின் மூவர்ண கொடியை ஏற்றுவது பல வேறுபாடுகள் இருக்கிறது.சுதந்திர தினத்தன்று இந்தியாவின் பிரதமர் கொடி ஏற்றுவார் அதே போல் குடியரசு தினத்தன்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் கூடிய அவிழ்த்து விடுவார்.

அதாவது சுதந்திர தினத்தன்று இந்தியாவின் மூவர்ண கொடியை கீழே இருந்து பிரதமர் கொடியை ஏற்றுவார். குடியரசு தினத்தன்று கொடி கம்பத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு மேலே இருக்கும் அதை இந்தியாவின் குடியரசுத் தலைவர் அவிழ்த்து விடுவார் இதுதான் சுகந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று கொடியை ஏற்றும் முறை.

சுதந்திர தினத்தன்று சுதந்திரம் பெற்றதை ஞாபகம் படுத்தும் வகையில் கொடியை கீழிருந்து மேல் ஏற்றப்படும். குடியரசு தினத்தன்று ஏற்கனவே மேலே ஏற்றப்பட்டு இருக்கும் கொடியை இந்தியா குடியசுத் தலைவர் அவிழ்த்து விடுவார்.

Read Also:

வள்ளலார் வரலாறு

புத்தர் வாழ்க்கை வரலாறு

ஆதித்த கரிகாலன் வரலாறு

அப்துல் கலாம் வரலாறு

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR