Homeதமிழ்நாடுசங்கரன்கோவில் வரலாறு | Sankarankovil History In Tamil

சங்கரன்கோவில் வரலாறு | Sankarankovil History In Tamil

சங்கரன்கோவில் வரலாறு | Sankarankovil History In Tamil

வணக்கம் நண்பர்களே.!!வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து பிறவி பலனை அடையவேண்டிய அற்புதமான திருத்தளத்தில் சங்கரன் கோயில் ஒன்றாகும்.சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமியை வழிபட்டு வந்தால் வீடுகளில் ஏற்படும் பூச்சி பல்லி பாம்பு தொல்லைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.

- Advertisement -

சங்கரன்கோவில்

தமிழ்நாடு மாநிலம்,தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவில் வட்டத்தில் சங்கரன்கோவில் என்னும் ஊரில் சங்கரநாராயணர் கோவில் அமைந்துள்ளது.சங்கரன்கோவிலில் சங்கரலிங்க சுவாமி,இறைவி கோமதி அம்மாள் என்ற ஆவுடையம்மன் காட்சியளிக்கின்றனர்.ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடித்தவசு விழா சங்கரநாராயணர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சங்கரன்கோவில் தல வரலாறு

சங்கன்,பதுமன் என்ற இரு நாக மன்னர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையில் சங்கன் தன் கடவுளான சிவன் தான் அதிகம் ஆற்றல் உடையவர் என்றும் பதுமன் தன் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சங்கன் ,துமன் இருவரும் கோமதி அம்மனிடம் சென்று முறையிட்டனர்.கோமதி அம்மன் சங்கன்,பதுமன் இருவரும் மட்டுமன்றி மக்கள் அனைவரும் இறைவனின் முழு வடிவத்தை உணர வேண்டும் என்பதற்காக சிவனிடம் வேண்டினார்.

- Advertisement -

சிவன், திருமால் கடவுள்கள் இருவருமே சமம் என்றும் அன்பினால் தியாகத்தினால் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்பதற்காக சிவனும் திருமாலும் இணைந்து சங்கரநாராயணாக காட்சியளித்தனர்.இரு கடவுளும் சமம் என இறைவனை வணங்கி கோமதி அம்மனுடன் இரு நாக மன்னர்களும் தங்கினார்கள்.

Read Also:

- Advertisement -
திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றிய முழு தகவல்

சங்கரன்கோவில் படம்

சங்கரன்கோவில் வரலாறு | Sankarankovil History In Tamil
சங்கரன்கோவில் வரலாறு

சங்கரன்கோவில் பூஜை நேரம்

சங்கரன்கோயில் சாமி வழிபாட்டு நேரம்

திறக்கப்படும் நேரம் மூடப்படும் நேரம்
காலை 5.30 மணி நண்பகல் 12.15 மணி
மாலை 4.00 மணி இரவு 09.30 மணி

 

சங்கரன்கோவில் பூஜை நேரம்

பூஜை நேரம்
திருவனந்தல் காலை 6.00 மணி
விளாபூசை காலை 6.30 மணி
சிறு காலசந்தி காலை 8.30 மணி
காலசந்தி காலை 10.30 மணி
உச்சிகாலம் நண்பகல் 12.30 மணி
சாயரட்சை மாலை 5.30 மணி
அர்த்தசாமம் இரவு 9.00 மணி

 

சங்கரன்கோவில் புற்று மண்

சங்கரன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கோமதி அம்மனை வணங்கி கோவிலின் உள்ளே அம்மனின் சன்னதியை சுற்றி அமைந்துள்ள புற்றின் மணலை எடுத்து திருநீராக இட்டுக் கொள்கின்றனர். இந்தப் புற்றில் இருந்து எடுக்கப்படும் மணலை உடல் முழுவதும் தடவிக் கொண்டால் நோய்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.

சங்கரன்கோவில் ஆடி தபசு

ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும்,சங்கன்,பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில் ஆடித்தபசு விழா கொண்டாடப்படுகிறது.

சங்கரநாராயணன் கோவிலில் அமைந்துள்ள சிரீ சக்கர பீடத்தில் நோயாளிகள்,தீய சக்திகளாக ஆட்கொள்ளப்பட்டவர்கள்,மனநல பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்களை அமர வைத்தால் அவர்களுக்கு நோய்கள் நீங்கிவிடும் என்று நம்பப்படுகிறது. கோயிலுக்கு வருபவர்கள் பாம்பு,தேள் ஆகியவற்றின் சிறு படங்களை உண்டியலில் செலுத்துவதின் மூலம் நலம் பெறுவார் என நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்

தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு
தனுஷ்கோடி பற்றிய சிறப்பு தகவல்கள்
ஏலகிரி மலை பற்றிய சிறப்பு தகவல்கள்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR