Homeஆன்மிகம்சேலம் முருகன் கோவில் | Selam murukan Kovil

சேலம் முருகன் கோவில் | Selam murukan Kovil

சேலம் முருகன் கோவில் | Selam murukan Kovil

வணக்கம் நண்பர்களே..!! நம் தினமும் கடவுளை வணங்கி வருகிறோம் அந்த வகையில் தமிழ் மக்களுக்கு முதன்மை கடவுளாக முருகன் இருந்து வருகிறார்.முருகன் என்றாலே பழனிதான் ஞாபகத்துக்கு வரும் அதை தொடர்ந்து பல ஊர்களில் முருகன் கோயில்கள் புகழ்பெற்றிருக்கிறது. மலேசியாவில் உலக அளவில் மிகவும் பெரிய முருகன் சிலை இருந்தது அதை தொடர்ந்து தற்பொழுது தமிழ்நாட்டில் சேலத்தில் முத்துமலை என்ற ஊரில் மலேசியா முருகனை விட மிகவும் பெரிய சிலையை அமைத்துள்ளனர் அந்த சிலை தற்போது உலகில் மிகப்பெரிய முருகன் சிலையாக முதல் இடத்தில் உள்ளது.

- Advertisement -

சேலம் முருகன் கோவில்

உலக அளவில் மலேசியாவின் உள்ள முருகன் சிலை தான் மிகப்பெரிய சிலையாக இருந்தது அதைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் முத்துமலை என்ற ஊரில் தற்பொழுது உலகில் மிகப்பெரிய முருகன் சிலையை அமைத்துள்ளனர்.

சேலம் முருகன் கோவில் | Selam murukan Kovil

சேலம் முருகன் கோவில் வசதிகள்

நாம் இந்த கோயிலுக்கு சுற்றுலா தளத்திற்கு செல்வதைப் போலவே செல்லலாம் அங்கு கோயில் போகும் முன்பே நிறைய கடைகள் உள்ளது.வண்டி கார்களில் செல்வர்களுக்கு பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

சேலம் முருகன் கோவில் 146 அடி

சேலம் முருகன் கோவில் மலேசியாவில் உள்ள முருகன் கோயிலை விட மிக உயரமான சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த முருகன் சிலையின் உயரம் 126 அடி சிலையின் பீடம் 19 அடி மொத்தமாக இந்த சிலையின் உயரம் 147 அடி ஆகும் அதனால் இது உலகின் மிகப்பெரிய முருகன் சிலை ஆகும்.

- Advertisement -

சேலம் முருகன் கோவில் | Selam murukan Kovil

சேலம் முருகன் கோவில் வழி

இந்த முருகன் கோயில் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக சென்னை செல்லும் நெடுஞ்சாலை அருகில் முத்துமலை முருகன் அமைந்துள்ளது இந்த முருகன் கோயிலுக்கு சேலம் நாமக்கல் ஆத்தூர் போன்ற ஊர்களில் இருந்து வரலாம்.ஆத்தூரில் இருந்து முத்துமலை முருகன் கோயிலுக்கு பஸ் வசதிகள் உள்ளது.

- Advertisement -

சேலம் முருகன் கோவில்கள்

முத்துமலை முருகன் சாமியை தரிசிப்பதற்கு முன்பு கீழே விநாயகர் கோயில் ஒன்று இருக்கும் முதலில் அங்கு சாமி கும்பிட்டு விட்டு அடுத்ததாக நாம் முத்து மலை முருகனை தரிசிக்க செல்லலாம். உயரமான முருகன் சிலையை தரிசித்து விட்டு சென்றாள் கீழே சின்ன முருகன் சிலை வைத்திருப்பார்கள் அதையும் தரிசித்து விட்டு உள்ளே சென்றால் அங்கு கோவில் ஒன்று இருக்கும் அந்த கோவிலிலும் முருகன் சிலை இருக்கும் அங்கு தான் அனைத்து விதமான அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.

சேலம் முருகன் கோயிலை கட்டியவர்கள்

இந்த முருகன் கோயிலை கட்டியவர்கள் திருவாரூர்  தியாகராஜன் சபதி குழுவினர்கள் தான் இந்த முருகன் கோயிலை கட்டியுள்ளனர் இவர்கள்தான் மலேசியாவில் உள்ள அந்த மிகப்பெரிய முருகன் சிலையும் கட்டியுள்ளனர் அதனால் அதேபோல இந்த சிலையும் கட்ட வேண்டும் என்பதற்காக அவர்களிடமே கொடுத்து இந்த சிலையை கட்டியுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR