Homeதமிழ்தமிழ் எழுத்துக்கள் சிறப்புகள் | Tamil Eluthukkal Ethanai,Total

தமிழ் எழுத்துக்கள் சிறப்புகள் | Tamil Eluthukkal Ethanai,Total

தமிழ் எழுத்துக்கள் | Tamil Eluthukkal Ethanai

தமிழ் எழுத்துக்கள் சிறப்புகள்

முதலெழுத்து என்றால் என்ன

  • ‘அ’ முதல் ‘ஔ’ முடிய உள்ள பன்னிரண்டு உயிரெழுத்துகளும் ‘க்’ முதல் ‘ன்’ உள்ள பதினெட்டு மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.
  • உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே. (நன்னூல்-9)
  • நம்முடைய உயிர் உடம்பில்லாமல் தனித்தும் இயங்கும். இடம்போடு கூடியும் இயங்கும்.  உயிர் எழுத்துக்கள் தனியாகவும் ஒலிக்கப்படும்;  மெய்யோடு கூடியும் ஒலிக்கப்படும்.  ஆகவே,  அவற்றை உயிர் எழுத்து என்று தமிழ் முன்னோர்கள் அழைத்தனர்.
  • உடம்பு உயிர் இல்லாமல் தனித்து இயங்காது. மெய்யெழுத்துகள் உயிர் இல்லாமல் ஒலிக்க முடியாது என்பதனால் அவை நம் உடம்பைப் போன்றவை. ஆகவே,  அவை மெய் எனப்பட்டன.
  • இவை, 216 உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளன.
  • இவ்வாறு, (உயிர் எழுத்துகளான அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12; மெய்யெழுத்துகளான க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய 18; 12×18=30) இம் முப்பது எழுத்தும் மொழிக்கு முதல் காரணமாய் விளங்குவதால்,    முதல் எழுத்துக்கள் என்று வழங்கப்பெறுகின்றன.

உயிர் எழுத்துக்கள் எத்தனை – 12 (குறில் 5, நெடில் 7)

  • உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்கள் குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து என்றும் நீண்ட ஓசையுடைய எழுத்துக்கள் நெடில் எழுத்து அல்லது நெட்டெழுத்து என்றும் வழங்கப்படும்.
  • குறில் – அ, இ, உ, எ, ஒ.
  • நெடில் – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்

தமிழ் எழுத்துக்கள்

- Advertisement -
  • மெய் எழுத்துக்கள் 18 (‘க்’ முதல் ‘ன்’ முடிய).
  • மெய்யெழுத்துகளில், வன்மையான ஓசை உடையவை வல்லினம் – க், ச், ட், த், ப், ற்.
  • மென்மையான ஓசை உடையவை மெல்லினம் – ங், ஞ், ண், ந், ம், ன்.
  • இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை இடையினம். – ய், ர், ல், வ், ழ், ள்.
  • இவற்றை முறையே வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்றும் கூறுவர்.
  • வல்லினம் க ச ட த ப ற என ஆறே (நன்னூல்-68)
  • மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறே (நன்னூல்-69)
  • இடையினம் ய ர ல வ ழ ள என ஆறே (நன்னூல்-70)

உயிர்மெய் எழுத்துக்கள் 216

  • உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துத் தோன்றும். இதில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்துப் பின்னும் ஒலிக்கப்படும்.
  • பதினெட்டு மெய் எழுத்துக்கள், பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து, இருநூற்றுப் பதினாறு உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றும்.
  • மெய் (18) X உயிர் (12) = உயிர்மெய் (216)

எடுத்துக்காட்டாக

  • க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
  • க் +     அ    =     க
  • க் +     ஆ    =     கா
  • க் +     இ    =     கி
  • க் +     ஈ     =     கீ
  • க் +     உ    =     கு
  • க் +     ஊ    =     கூ
  • க் +     எ     =     கெ
  • க் +     ஏ     =     கே
  • க் +     ஐ    =     கை
  • க் +     ஒ    =     கொ
  • க் +     ஓ    =     கோ
  • க் +     ஒள   =     கௌ
  • இவ்வாறே மற்ற மெய் எழுத்துகளும் 12 உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுவதை இணைப்பில் காண்க.
  • உயிர் எழுத்துகளுக்கு உரிய மாத்திரையே உயிர்மெய் எழுத்துகளுக்கும் பொருந்தும்.
  • அதாவது உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரையும், உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரையும் பெறும்.
  • உயிர்மெய் எழுத்துக்கள் மெய் எழுத்துகளைப் போலவே வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று இனமாகவும் வரும்.
  • உயிர்மெய் எழுத்துகளின் ஒலிவடிவம் உயிர் எழுத்தின் ஓசையும் மெய் எழுத்தின் ஓசையும் கலந்ததாக இருக்கும். உயிர்மெய் எழுத்துகளை ஒலித்து, அதில் மெய்யின் ஓசையும் உயிர் எழுத்தின் ஓசையும் கலந்து இருப்பதை அறிக.

புள்ளி விட்டு அவ்வொடு முன் உரு ஆகியும்

ஏனை உயிரொடு உருவு திரிந்தும்

உயிர் அளபாய் அதன் வடிவு ஒழித்து இருவயின்

- Advertisement -

பெயரொடும் ஒற்று முன்னாய் வரும் உயிர் மெய்

(நன்னூல் 89)

- Advertisement -

பொருள்

  • அகர உயிர் எழுத்துடன் சேர்ந்து வரும்போது புள்ளி இல்லாமலும் மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது வடிவம் திரிந்தும் வரும்.
  • மாத்திரை கொள்ளும்போது உயிர்எழுத்தின் மாத்திரையே கொண்டு வரும். மெய் எழுத்து முன்பும் உயிர் எழுத்து பின்பும் வந்து உயிர் மெய் என்று இரண்டின் பெயரையும் பெற்று வரும்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR