Homeதமிழ்நாடுதிருச்செந்தூர் முருகன் கோவில் பற்றிய முழு தகவல் Thiruchendur Murugan Temple

திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றிய முழு தகவல் Thiruchendur Murugan Temple

திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றிய முழு தகவல் | Thiruchendur Murugan Temple

Thiruchendur:வணக்கம் நண்பர்களே திருச்செந்தூர் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது திருச்செந்தூர் முருகன் கோயில் தான் திருச்செந்தூர் கோவில் திறக்கும் நேரம் மூடும் நேரம்மற்றும் திருச்செந்தூர் கோவிலை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

- Advertisement -

Thiruchendur Murugan Temple In Tamil

திருச்செந்தூர் என்று சொன்னாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது திருச்செந்தூர் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள முருகன் கோயில் தான். திருச்செந்தூர் முருகன் கோயிலை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது இது ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது.

திருச்செந்தூர் முருகன் தமிழ்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் சென்னையில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாக கருதப்படுகின்றது.முருகன் கோயிலிலே திருச்செந்தூர் முருகன் கோவில் மட்டும் தான் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது.

Thiruchendur Murugan Temple History In Tamil

சூரபத்மன் தேவர்களை தொந்தரவு செய்ததால் தேவர்கள் சூரபத்தினை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர் தேவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார் அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றி பின் சிவபெருமானின் கட்டளையை ஏற்று சூரபத்மனை அளிக்க திருச்செந்தூர் வந்தார்.

முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி தேவர்களின் குருவான வியாழ பகவான் திருச்செந்தூரில் தவமிருந்தார் அவருக்கு காட்சி தந்த முருக பெருமான் இங்கேயே தங்கி விட்டார். முருகன் தன் படைகளுடன் சென்று சூரபக்தனை வதம் செய்தார். அதன் பின்பு வியாழ பகவான் முருகனிடம் தனக்கு காட்சி தந்த இந்த இடத்திலே எழுந்த அருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படி திருச்செந்தூர் கடற்கரை ஓரமாக அனைவருக்கும் முருகப்பெருமான் காட்சி தந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

Thiruchendur Murugan Temple Timings in Tamil

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

Thiruchendur Murugan Temple Photos

Thiruchendur Tourist Place
Thiruchendur Tourist Place

Thiruchendur Murugan Temple Online Booking In Tamil

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு இரண்டு முறைகள் உள்ளது பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனமும் உள்ளது ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம் முன் பதிவு தரிசன டிக்கெட் கானா கட்டணத்தைசெலுத்தி தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள  இங்கு கிளிக் செய்யவும்

 

Thiruchendur Tourist Place In Tamil

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரை ஓரமாக முருகனின் ஆறுபடை வீடுகளின் இரண்டாவது வீடாக திருச்செந்தூர் முருகன் கோயில் அமைந்துள்ளது திருச்செந்தூரில் ஒரு முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கிறது. பெரும்பாலும் சுற்றுலா செல்பவர்கள் திருச்செந்தூர் வழியாகச் சென்றால் கண்டிப்பாக அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் செல்பவர்கள் அந்த அளவுக்கு மிகவும் புகழ்பெற்ற முருகன் கோயிலாக இருக்கிறது.

Thiruchendur Murugan Images

Thiruchendur Murugan Images
Thiruchendur Murugan Images

திருச்செந்தூர் செல்லும் வழி

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ரயில் மற்றும் பேருந்து மூலமாக செல்லலாம் அல்லது தனி வாகனத்தின் மூலமாகவும் செல்லலாம் திருச்செந்தூர் முருகன் கோயில் அருகில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது தூத்துக்குடியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் திருச்செந்தூர் முருகன் கோயில் அமைந்துள்ளது.தூத்துக்குடியில் இருந்து மணப்பாடு வழியாக கன்னியாகுமரி செல்லும் வழியில் திருச்செந்தூர் முருகன் கோயில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் ரயில் நேரம்

தமிழக தலைநகரமான சென்னை எழும்பூரில் சரியாக 4.05 மணிக்கு திருச்செந்தூர் (செந்தூர்) விரைவு வண்டி புறப்பட்டு திருச்சி மதுரை திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு காலை 8 மணி அளவில் வந்தடைகிறது.அதேபோல் திருச்செந்தூர் (செந்தூர்) விரைவு வண்டி திருச்செந்தூரில் இருந்து இரவு 7:10 மணியளவில் கிளம்பி திருநெல்வேலி மதுரை திருச்சி வழியாக சென்னை எழும்பூர் காலை 10:30 மணி அளவில் சென்றடைகிறது.

Read Also:

வால்பாறை பற்றிய சிறப்பு தகவல்கள் | Valparai Tourist Places

தனுஷ்கோடி பற்றிய சிறப்பு தகவல்கள் | Dhanushkodi Beach,Tourist Places 

தேனி பற்றிய சிறப்பு தகவல்கள் | Theni Tourist Places and Temple

Yelagiri Places to Visit | ஏலகிரி மலை பற்றிய சிறப்பு தகவல்கள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR