Homeதமிழ் கட்டுரைகள்திருஞானசம்பந்தர் வரலாறு | Tirunnasambandar History In Tamil

திருஞானசம்பந்தர் வரலாறு | Tirunnasambandar History In Tamil

திருஞானசம்பந்தர் வரலாறு | Tirunnasambandar History In Tamil

வணக்கம் நண்பர்களே.!! திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இவரை தமிழில் அறிவுசேரர் அல்லது சம்பந்தர் என்றுஅழைக்கப்படுவார்.இவர் முருகனின் அவதாரமாக கருதப்பட்டார்.

- Advertisement -

திருஞானசம்பந்தர் ஆசிரியர் குறிப்பு

பெயர் திருஞானசம்பந்தமூர்த்தி
இயற்பெயர் சம்பந்தன்
பிறந்த ஊர் சீர்காழி

பெற்றோர் பெயர்

தந்தையார் சிவபாத இருதயர்
தாயார் பகவதி அம்மையார்

திருஞானசம்பந்தர் சிறப்பு பெயர்கள்

சம்பந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட திருஞானசம்பந்த மூர்த்திக்கு ஆளுடைய பிள்ளையார், பாலாராவயர், பரசமய கோளரி என வேறு பெயர்கள் உள்ளது.

திருஞானசம்பந்தர் வரலாறு

திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் சீர்காழி என்னும் ஊரில் சிவபாதவிருதயர்க்கும், பகவதி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.

சம்பந்தன் தனக்கு மூன்று வயதாக இருக்கும் போது தனது தந்தையுடன் கோயிலுக்கு சென்றதாகவும் அங்கு தனது தந்தை கரையில் அமர் விட்டு குளிக்கச் சென்றபோது சிறிது நேரம் நீரில் மூழ்கி இருந்த சமயம் தந்தையை காணாத குழந்தை அம்மா அப்பா என்று கூவி அழுததாகவும் அப்பொழுது உமா தேவியார் சிவபெருமானுடன் திருஞானசம்பந்தர் குழந்தையாக இருக்கும் பொழுது காட்சி கொடுத்து ஞானப்பால் ஊட்டினார்.

- Advertisement -

அதனை பருகி சம்பந்தன் சிவஞானத்தை பெற்றது.சிவபெருமானிடம் ஞானப்பால் குடித்ததால் சம்பந்தன் ஞானசம்பந்தன் எனப் பெயர் பெற்றார்.

திருஞானசம்பந்தர் படம்

திருஞானசம்பந்தர் வரலாறு|Tirunnasambandar History In Tamil
திருஞானசம்பந்தர் வரலாறு

திருஞானசம்பந்தர் இயற்றிய நூல்கள்

திருஞானசம்பந்தர் இயற்றிய நூல்கள் 1,2,3 ஆம் திருமுறைகள் என்ற நூலை இயற்றியுள்ளார். முதல் மூன்று திருமுறைகள் திருக்கடைகாப்பு என்று போற்றப்படுகிறது.

- Advertisement -

திருஞானசம்பந்தர் பாடல் வரிகள்

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் மூன்று திருமுறைகள் உள்ளன. அந்த மூன்று திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.

Read Also:

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

 

கோளறு பதிகம் முதல் பாடல்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

கோளறு பதிகம் இரண்டாவது பாடல்

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க

எருதேறி ஏழை உடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்

உடனாய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

கோளறு பதிகம் மூன்றாம் பாடல்

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசை தெய்வமான பலவும்

அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

கோளறு பதிகம் நான்காம் பாடல்

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து

மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்

கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

கோளறு பதிகம் ஐந்தாம் பாடல்

நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும்

விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தே னுளமே

புகுந்த வதனால் வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு

மிகையான பூத மவையும்

அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல

டியாரவர்க்கு மிகவே

இவற்றையும் பார்க்கவும்

வள்ளலார் வரலாறு
மாணிக்கவாசகர் வரலாறு
பாரதியார் பற்றிய முழு விவரம்
சிவபுராணம் பாடல் வரிகள்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR

Incoming Call Lock

Face Swap App