Homeதமிழ்Toor Dal in Tamil | துவரம் பருப்பு பயன்கள்

Toor Dal in Tamil | துவரம் பருப்பு பயன்கள்

துவரம் பருப்பு நன்மைகள் |Toor Dal In Tamil

உலகில் எங்கும் எத்தனையோ வகைப்பரப்புகள் இருக்கின்றது.இந்த துவரம் பருப்புகள் அனைத்துமே நமது உடல் நலத்திற்கு மிகவும் அத்தியாவசிய சத்துக்களை தருகின்றது.இதில் நம் நாட்டு தமிழில் அன்றாட பயன்படுத்தப்படும் துவரம் பருப்பு பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

துவரம் பருப்பின் பயன்கள்

துவரம் பருப்பு சிறந்த அளவில் புரோட்டின் போலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றது.இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதினால் குடல் இயக்கம் சீராக இருக்கும்.மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனைகளை ஏற்படுவதை தடுக்கின்றது.

உடல் எடை அதிகரிக்க

துவரம் பருப்பு சாப்பிட்டால் அதிக சதை பற்றி பிடிப்பு ஏற்படாமல் மெலிந்த தேகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களின் உடல்வாகு பெருக துவரம் பருப்பை வேக வைத்து பசு வெண்ணையில் வதக்குவது போல் கிளரி சாப்பிட வேண்டும்.பிறகு அரிசி சாதத்துடன் இதனை கலந்து பசு நெய்யுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு உடலில் சதை பிடிப்பு உண்டாகும் மேலும் உடலுக்கு வலிமையும் தரும்.

ரத்த அழுத்தம்

- Advertisement -

துவரம் பருப்பு சாப்பிடுவதின் மூலம் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவியாக இருக்கிறது.துவரம் பருப்பில் இருக்கும் பொட்டாசியம் அதிகம் சத்து நிறைந்த காணப்படுகிறது.இதனால் ரத்த குழாய் விரிப்பானாக செயல்பட்டு ரத்த ஓட்டத்தை சீராக நடைபெற செய்கின்றது.இதனால் ரத்த அழுத்தம் குறைந்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கின்றது.ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி இதனை உணவில் சேர்த்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.

ஆரோக்கிய வளர்ச்சி

- Advertisement -

உடலில் இருக்கும் தசைகளின் வலிவிற்கு மிக அவசியமாக இருக்கின்றது.துவரம் பருப்பு ஆரோக்கியமான உடல் வளர்ச்சி தேவையான புரதச்சத்து அதிகம் இருக்கின்றது.புரதச்சத்தானது செல்கள் திசுக்கள் எலும்புகள் மற்றும் தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது.குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும்.

toor dal in tamil

நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் இருக்கும் நோய்கள் நம்மை க்காமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும் துவரம் பருப்பில் இருக்கும் வைட்டமின் சி சத்தானது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.இது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் செயல்பாட்டு உடல் நலத்தை மேம்படுத்த நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்கின்றது.

இதய நலம்

உலகில் இருக்கும் அனைவருக்கும் இதய சம்பந்தமான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.துவரம் பருப்பில் இருக்கும் பொட்டாசியம் நார்ச்சத்து குறைந்த அளவு கொழுப்பு சத்து ஆகியவை இதயத்தை பாதுகாக்கிறது.பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்குகின்றது நார்ச்சத்து கொழுப்பு தடுக்க உதவியாக இருக்கின்றது.துவரம் பருப்பை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதயம் நலமாக இருக்கும் மனிதர்களின் ஆயுளை அதிகரிக்க செய்கின்றது.

செரிமான பிரச்சனை

நமது உணவு உண்ணும் பொழுது நன்கு செரிமான செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும் துவரம் பருப்பில் இருக்கும்.நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவியாக இருக்கின்றது.மேலும் உடலில் இருக்கும் கழிவுகளை நீக்கி வெளியேற்றவும் நார்சத்து உதவியாக இருக்கின்றது.மேலும் வயிற்றுப்போக்கு வாந்தி மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படாமல் தடுக்கின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR