Homeதமிழ்விக்கல் வருவது நல்லதா கெட்டதா

விக்கல் வருவது நல்லதா கெட்டதா

விக்கல் வருவது நல்லதா? கெட்டதா?

அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது விக்கல் ஏற்படுவது சாதாரணம்.விக்கல் ஏற்பட நாம் உதவி செய்வதின் சுருக்கமே இந்த காரணமாகும்.அதுமட்டுமின்றி விக்கல் ஏற்பட நம் உடலில் ஏற்படும் பல நோய்களும் காரணமாக இருக்கின்றது.சில நோய்களின் முதல் அறிகுறையை விக்கலின் மூலம் தொடங்குகின்றது.

- Advertisement -

நமது உடலில் பல தீராத மர்மங்களை கொண்டிருக்கிறது.இவற்றுக்கு தீர்வு இன்னும் கண்டுபிடிக்கவில்லை விக்கல் ஏற்படுவதற்கு உதவி தானத்தின் தன்னிச்சையான சுருக்கமே காரணமாக அமைகின்றது.விக்கல் ஏற்படும் ஒலி எதனால் ஏற்படுகின்றது என்று உங்களுக்குத் தெரிகின்றதா விக்கல் வரும் போது நமது குரல் நாங்கள் சிறிது நேரத்திலேயே மூடப்பட்டு விடுகிறது.அதனால் தான் விக்கல் வரும் போது சத்தம் வருகின்றது.மேலும் விக்கலை பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

விக்கல் வருவது நல்லதா கெட்டதா

நீண்ட நேரம் விக்கல் பிரச்சனை

விக்கல் அதிக நேரம் வந்து கொண்டிருந்தால் அது கவலைக்குரியது.நம்மை சோர்வடையும் நேரத்தில் உடலே புத்துணர்ச்சி பெற வைக்க சோடா குடிப்பது கூட நமக்கு விக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது.விக்கல் பல நோய்களின் அறிகுறியாக இருக்கிறது.உங்களுக்கு விக்கல் 48 மணி நேரம் முதல் 30 நாட்கள் வரை தொடர்ந்து நீடிக்கும் போது அவை உங்களுக்கு சிக்கலை தரக்கூடியது.இப்படி தொடர் விக்கல் ஏற்பட்டால் அதனை கவனத்தில் கொண்டு மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும்.

நரம்பு பிரச்சனை

உதரவிதானத்தின் சுருக்கத்தினால் விக்கல் ஏற்படுகின்றது. உதரவிதானத்தில் உள்ள வேகஸ் அல்லது பிரேனிக் நரம்புகளில் ஏதேனும் எரிச்சல் அல்லது சேதமோ ஏற்பட்டால் விக்கல் ஏற்படுகின்றது.நரம்புகள் உதரவிதானத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.இதனால் உங்கள் நரம்புகளில் விக்கல் மற்றும் எரிச்சலுக்கு வழி வகுக்கின்றது.

கழுத்து நரம்பில் ஏற்படும் பிரச்சினைகள் உங்களுக்கு கட்டிகள் ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி தொண்டை வலி அல்லது குரல் வளைய அலர்ஜி ஆசிட் ரிப்லெக்ஸ் நிமோனியா போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றது.நரம்பு மண்டலம் பாதிக்கும் எந்த ஒரு தொற்று அல்லது பிரச்சனையும் நம்மளுடைய நாள்பட்ட விக்கல்களில் பிரதிபலிக்க கூடுகிறது.

- Advertisement -

மூளை சுவாசத்தை கட்டுப்படுத்துவதினால் கூட விக்கல் ஏற்படுகிறது.இதனைப் போல் மல்டிபிள் ஸ்களீரோசிஸ்,மூளை காயம்,என்செபலிடிஸ் மற்றும் மூளை காய்ச்சல் பக்கவாதம் மூளை கட்டிகள் மற்றும் முதுகெலும்பு காயங்கள் போன்ற பிரச்சனைகள் மூலம் விக்கல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகள்

உங்களுக்கு வயிறு குடல் கல்லீரல் மற்றும் கணையம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் விக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.இது அதிகப்படியான சோடா பானங்களை அருந்துவது அதிகப்படியான உணவு உட்கொள்வது வேகமாக சாப்பிடுவது மற்றும் மிட்டாய் அல்லது இனிப்பு அதிகமாக சாப்பிடுவது போன்றவற்றதை செய்தால் விக்கல் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.

- Advertisement -

நம்மளுடைய வயிற்று சம்பந்தமான பிரச்சனை குறிப்பாக இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகளால் கூட விக்கல்கள் ஏற்படுகிறது.இதனைப் போல் விக்கல் களை ஏற்படும் சில நோய்கள் இருக்கின்றது.வயிற்றுப்புண் மஞ்சள் காமாலை காலரா குடல் அலர்ஜி நாட் பட்ட போன்ற நோய்கள் மூலம் விக்கல் ஏற்படுகின்றது.

உட்கொள்ளும் மருந்துகள் பிரச்சனை

நீங்கள் சில மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதினாலும் கூட விக்கல் ஏற்படுகிறது.உடலில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்தும் வடிவமே விக்கல்.நாம் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகளை கூட விக்கல் ஏற்பட காரணமாக அமைகின்றது.

அப்படிப்பட்ட மருந்துகள் என்னவென்று பார்ப்போம்.மயக்க மருந்து,நீரிழிவு நோய்,சிறுநீரக கோளாறுகள்,ஸ்ப்ராய்டுகள்,கிமோதெரபி பயன்படுத்தப்படும் மருந்துகள் ரத்தத்தில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு பிரச்சனைகள் போன்றவற்றால் விக்கல் ஏற்படுகிறது.

அறுவை சிகிச்சை

விக்கல்கள் ஏற்படுத்தும் பகுதிகளில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சைகள் நரம்பு மண்டலம்,மூளை,இரைப்பை குடல் பகுதிகள் அல்லது உதரவிதானம் போன்ற அறுவை சிகிச்சைகள் கூட விக்கல்களை ஏற்படுத்த இருக்கிறது.  இருதய பிரச்சனைகள், மாரடைப்பு மற்றும் வீக்கம் போன்ற விளைவுகளினாலும் விக்கல் ஏற்படுகிறது.இதை மாரடிப்பின் எச்சரிக்கை அறிகுறியாக செயல்படுகிறது.இது மட்டும் இன்றி நாள்பட்ட விக்கல்களுக்கு புற்று நோய் கூட அடிப்படை காரணமாக இருக்கின்றது.

மனசோர்வு

பதட்டம் அல்லது மனசோர்வினால் ஏற்படும் மன உளைச்சல் கூட விக்கலை ஏற்படுகிறது.நாள்பட்ட விக்கல்களுக்கு எது காரணமாக இருக்க கூடும் என்பதனை மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ளவும்.நாள்பட்ட விக்கல் அடிப்படை உடல் நல பிரச்சினைகளை அதிகரிக்க கூடும் எனவே விக்கலை சாதாரணமாக எடுத்துக்கொண்டு புறக்கணிக்கக் கூடாது.

விக்கல் வருவது நல்லதா கெட்டதா

விக்கலை நிறுத்துவது எப்படி

மூச்சை நன்றாக உள்ளெழுத்து அடக்கிக் கொள்ள வேண்டும் 20 எண்ணும் வரை மூச்சை வெளியில் விடக்கூடாது. பிறகு மூச்சை வெளியில் விட வேண்டும் இப்படி ஐந்து முறை செய்தால் விக்கல் நிற்கும்.வேகமாக ஒரு சொம்பு சாதாரண தண்ணீர் குடித்தால் விக்கல் நிற்கும் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதை தானாக கரையவிட்டால் விக்கல் நிற்கும் ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும்.

ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விட்டு பின் அந்த காற்றையே மீண்டும் சுவாசித்தால் விக்கல் நின்று விடும் இவ்வாறு 20 முறை செய்தால் ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து விக்கல் நிற்கும் அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது நன்று.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR